எனக்கு அந்த 3 பேர்ல 2 பேர் கட்டாயம் விளையாடனும்.. இந்த கிரிக்கெட் தொழில் இப்படிதான் – கம்பீர் வெளிப்படையான பேச்சு

0
229
Gambhir

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கவுதம் கம்பீர் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று நிறைய விஷயங்கள் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் மூத்த வீரர்கள் இனி எப்படி அணிக்கு விளையாட வேண்டும்? என்பது குறித்தும் அவர்களை எப்படி கையாள்வது? என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் எனவும், அவர்கள் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார்கள் எனவும் பேச்சுகள் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கவுதம் கம்பீர் மூத்த வீரர்கள் தேவையான அளவுக்கு ஓய்வெடுத்து இருக்கிறார்கள் எனவே அவர்கள் அணிக்கு திரும்பி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று விரும்புவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் கம்பீர் பும்ராவின் ஓய்வில் எந்த விதமானநெருக்கடியையும் கொடுக்கவில்லை. பும்ரா இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் முழுமையாக ஓய்வெடுத்து செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு திரும்பலாம். இது அவருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பு சிறந்த ஓய்வாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் கவுதம் கம்பீர் கூறும் பொழுது “பும்ராவை பொறுத்தவரையில் அவர் ஒரு அரியவகை பந்துவீச்சாளர் என்கின்ற காரணத்தினால் அவர் விளையாட வேண்டும் என்று எந்த அணியினரும் விரும்புவார்கள். ஆனால் பெரிய ஆட்டங்களுக்கு அவரை புத்துணர்ச்சியோடு கொண்டு வருவது எங்களுடைய பொறுப்பு.மேலும் பும்ரா என்று மட்டும் இல்லாமல் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பணிச்சுமை மேலாண்மை முக்கியமானது.

பும்ரா போன்ற ஒருவருக்கு அவருடைய பணிச்சுமையை நாம் சரியாக நிர்வகிக்க வேண்டும். முக்கிய பேட்டர்கள் நல்ல பார்மில் இருக்கும் பொழுது அவர்கள் எல்லா போட்டிகளையும் விளையாட வேண்டும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தற்பொழுது டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். எனவே அவர்கள் இரண்டு வடிவங்களில் மட்டுமே விளையாடுவார்கள். இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய எல்லா போட்டிகளிலும் அவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதையும் படிங்க : கோலி ரோகித் இல்லை.. என் எதிரா ஆடுன மிகச்சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்.. பாபர் அசாம் தேர்வு

நான் கற்றுக் கொண்டிருக்கும் விஷயம் மிகவும் எளிமையானது அது வெற்றியைப் பற்றியது. யாரோ ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடிகின்ற தொழிலில் நாங்கள் இருக்கிறோம். எனவே நாங்கள் வெற்றிக்கு நேர்மையாகவும் கடுமையாகவும் முயற்சி செய்வோம். வெற்றி மட்டுமே இங்கு பிரதானமானது. வெற்றி பெறுகின்ற அணியின் ஓய்வறையே மகிழ்ச்சியான ஓய்வறையாக இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -