தற்பொழுது துலீப் டிராபியில் விளையாடி வரும் இந்திய இளம் வீரர் ரியான் பராக்குக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி அறிவுரை கூறி முக்கியமான கோரிக்கை ஒன்றை முன் வைத்திருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு திலீப் டிராபியின் இரண்டாவது சுற்று போட்டிகள் நேற்று முதல்துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ அணியில் ரியான் பராக் இடம் பெற்று இருக்கிறார். அவருடைய அதிரடியான ஆட்டம் பலரது கவனத்தை தற்போது கவர்ந்து வருகிறது.
ரியான் பராக்கின் எழுச்சி
கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் அசாம் அணிக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தியதோடு, ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் சுழல் பந்து வீச்சாளராகவும் பெரிய பங்களிப்பை கொடுத்து வந்திருக்கிறார். தனி ஒரு வீரராக அவர் அசாம் அணியை உள்நாட்டு போட்டிகளில் தாங்கி இருக்கிறார் என்று கூறலாம்.
இதைத்தொடர்ந்து இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 500 ரன்கள் தாண்டி எடுத்தார். மேலும் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளராக இருப்பதால் இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. திடீரென இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இளம் வீரராக மாறிக் கொண்டிருக்கிறார்.
பசித் அலி அறிவுரை
இந்த நிலையில் ரியான் பராக் குறித்து கூறியிருக்கும் பசித் அலி “ரியான் பராக்கிடம் நிறைய திறமைகள் இருக்கிறது அவர் சிரமமில்லாத வீரராக இருக்கிறார். அவர் நேற்று மிட் ஆஃப் திசையில் சிரமம் இல்லாமல் ஒரு சிக்சர் அடித்தார. அது டாப் கிளாஸ் ஷாட். ஆனால் அதை அவர் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளவில்லை. தனது திறமையை நியாயப்படுத்தவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் போல எதிர் தாக்குதல் செய்கிறார். அப்படி என்றால் ஆரம்பம் கிடைத்தால் நீங்கள் தாக்குப்பிடித்து நின்று பெரிய இங்கிலீஷ் விளையாட வேண்டும்.
ரியான் பராக் சிறப்பாக விளையாடிய ரன்கள் குவிக்க வேண்டிய நாட்கள் இவை. அடுத்தடுத்து இந்திய அணிக்கு நிறைய டெஸ்ட் தொடர்கள் இருக்கின்றன. அவர் இப்போதைக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டாம். உங்களுக்கு இப்பொழுது நான்காம் இடத்தில் இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.
கம்பீர் இதையும் படிங்க : ஆல் டைம் குட் பாய்ஸ் பிளேயிங் XI.. கம்பீர் முதல் கோலி வரை இடம்.. ஸ்ரீசாந்த் வித்தியாசமான தேர்வுகள்
முந்தைய போட்டியிலும் கூட அவர் ஆக்ரோஷமாக விளையாடினார். நீங்கள் 30 முதல் 35 ரன்கள் எடுத்திருந்தால் நீங்கள் உங்கள் விக்கெட்டை அப்படி கொடுக்கக் கூடாது. மேலும் அவர் இதை கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் பயிற்சியாளர்கள் அவரிடம் பேசி இது சரியான வழிமுறை இல்லை என்று கூற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.