இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் எல்லா காலத்திலும் பொறுமையான அமைதியான வீரர்களுக்கான பிளேயிங் லெவனை வித்தியாசமான முறையில் நகைச்சுவையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த பிளேயிங் லெவனில் கம்பீர் முதல் விராட் கோலி வரையில் களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் எல்லா வீரர்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறார். இதில் உச்சபட்சமாக 11 வது வீரராக தன்னுடைய பெயரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
குட் பாய்ஸ் பிளேயிங் லெவன்
ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்ரீசாந்த் குட் பாய்ஸ் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்தார். இதில் அவர் தேர்ந்தெடுத்து இருக்கும் 11 வீரர்களுமே களத்தில் மிகவும் ஆக்ரோஷமானவர்கள், எந்த நிலையிலும் அமைதியாக இருக்கவே மாட்டார்கள் என்பதுதான் இதில் இருக்கும் வித்தியாசமான நிகழ்வு.
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் களத்தில் தன்னிடம் மோதிய தென் ஆப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ நெல் கூட இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் எப்போதும் நடுவருடன் ஏதாவது பிரச்சனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஷாகிப் அல் ஹசன் மற்றும் கீரன் பல்லாண்டு போன்றவர்களும் இருக்கிறார்கள்.
ஸ்ரீசாந்தின் வித்தியாசமான தேர்வுகள்
இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் தொடக்க ஆட்டக்காரர்களாக வந்ததால் இந்த இடத்தை கொடுத்திருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் ஆக்ரோஷமான கேப்டன்களான ரிக்கி பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலி அடுத்த இரண்டு இடங்களில் வருகிறார்கள். தொடர்ந்து பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி மற்றும் பங்களாதேஷின் சாகிப் அல் ஹசன் இடம் பெற்று இருக்கிறார்கள் .
இதையும் படிங்க : உங்களால நம்ப முடியாது.. ரோகித் பாய் மேட்ச்ல எங்ககிட்ட தான் அந்த விஷயத்தை கேட்டார் – துருவ் ஜுரல் பேட்டி
இதைத்தொடர்ந்து கீரன் பொல்லார்டு, ஹர்பஜன் சிங், சோயப் அக்தர்,ஆண்ட்ரூ நெல் ஆகியோரைத் தொடர்ந்து 11 வது வீரராக ஸ்ரீசாந்த் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய இந்த குட் பாய்ஸ் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீசாந்த் குட் பாய்ஸ் பிளேயிங் லெவன்:
கௌதம் கம்பீர்
விராட் கோலி
ரிக்கி பாண்டிங்
சவுரவ் கங்குலி (கே)
ஷாஹித் அப்ரிடி
ஷகிப் அல் ஹசன்
கீரன் பொல்லார்ட்
ஹர்பஜன் சிங்
சோயப் அக்தர்
ஆண்ட்ரே நெல்
எஸ்.ஸ்ரீசாந்த்