இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டிகள் அனைத்தையும் துபாயில் விளையாட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சக்லைன் முஸ்தாக் இந்திய அணியின் மீது தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், அடுத்த சாம்பியன் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு பெற்று இன்று முதல் நடைபெற உள்ளது. அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் விளையாட ஒப்புக்கொண்ட நிலையில், இந்திய அணி மட்டும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பு கிரிக்கெட் வாரியங்கள் இடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவில் வந்து கிரிக்கெட் விளையாடும் போது இந்திய அணியும் விளையாடி இருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வந்தனர். இப்படி இருக்க தற்போது முன்னாள் பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் சக்லைன் அகமது இன்னும் ஒரு படி மேலே சென்று டை அணிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசுவதை இந்திய அணி நாகரீகமாக கருதுவதாகவும், இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக பேசும் போது “இந்திய அணியின் கோபம் இன்னும் தீரவில்லை என்று தெரிகிறது, ஆனால் நாங்கள் அவர்களை இன்னும் பாராட்டி வருகிறோம். பாகிஸ்தானில் உள்ள இளைஞர்கள் அனைவரும் விராட் கோலி மற்றும் பும்ராவை பார்க்க விரும்புகிறார்கள். இந்திய அணியினர் எந்த உலகத்தில் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை மேலும் எதை அடைய விரும்புகிறார்கள் எனவும் எனக்கு புரியவில்லை.
இதையும் படிங்க:நான் சொல்றது கஷ்டமா இருக்கலாம்.. ஆனா இந்திய அணி இரண்டாவது செஞ்சது ரொம்பவே தப்பு – தினேஷ் கார்த்திக் ஆதங்கம்
அவர்கள் எப்போது புத்திசாலியாக இருக்கப் போகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. எப்போது அவர்களது மனது திறக்கும்? ஆங்கில நாகரிகம் போல் டை அணிந்து விட்டு ஆங்கிலத்தில் பேசுவதால் நீங்கள் நாகரீகமாக மாறிவிட்டதாக நினைக்கிறார்கள். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு தகுந்த நிலைப்பாட்டை எடுத்து அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்” என சர்ச்சையான கருத்துக்களை பேசியிருக்கிறார். இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.