இந்திய கிரிக்கெட்

அஸ்வின் மேட்ச் வின்னர் எல்லாம் கிடையாது.. இந்த முடிவை அப்பவே எடுத்திருக்கணும் – பாக் பசித் அலி கருத்து

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அஸ்வின் எடுத்த முடிவு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு

ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்தான இந்திய சுழற் பந்துவீச்சாளராக திகழ்ந்தார். அதுவும் இந்திய மைதானங்களில் அணி விளையாடுகிறது என்றால் அதில் அஸ்வின் பெயர் நிச்சயமாக இடம் பெறும். மேலும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையும் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையும் ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் மகத்தானவை. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு அஸ்வின் தேர்வாகி இருந்த நிலையில் மூன்றாவது போட்டியோடு தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.

குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் வாஷிங்டன் சுந்தர் அணியில் எடுக்கப்பட்ட போதே அஸ்வினின் இடம் கேள்விக்குறியாகிறது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருக்கிறார். மேலும் 38 வயதாவதால் எதிர்கால தலைமுறைக்கு வழி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷித் அலி அஸ்வின் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சுந்தர் தேர்வு செய்யப்பட்ட போது தனது ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அஸ்வின் மேட்ச் வின்னர் கிடையாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அஸ்வின் எப்போது ஓய்வெடுத்து இருக்க வேண்டும் என்றால் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டபோது எடுத்திருக்க வேண்டும் அல்லது ஐந்து டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த பிறகு தனது ஓய்வை அறிவித்திருக்க வேண்டும். மூன்றாவது போட்டியிலேயே ஓய்வெடுத்து இருப்பது சூழ்நிலையை கடினமாக்கி இருக்கிறது. மேலும் ரோகித் மற்றும் கம்பீர் அஸ்வினை சமாதானப்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் அஸ்வின் அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் தேவைப்படுவார்.

இதையும் படிங்க:எங்கள் பேட்டிங் நல்லாலதான்.. ஆனா ஆஸினால இதை செஞ்சிருக்கவே முடியாது.. அடிச்சு சொல்றேன் – கவாஸ்கர் பேட்டி

அஸ்வின் மேட்ச் வின்னர் என்று என்னை கேட்டால் நான் இல்லை என்று சொல்வேன். அவர் ஒரு தொடரின் வெற்றியாளர். டி20யில் யாராவது ஒரு போட்டியை வென்று கொடுத்து விட்டால் மேட்ச் வின்னர் வந்துவிட்டார் என்று சொல்கிறோம். குறிப்பாக இந்தியாவில் போட்டியில் வெற்றி பெறும் வீரர் வேறு தொடரை வெல்லும் வீரர் வேறு. ஒரு போட்டியில் 15 பந்துகளில் 35 ரன்கள் எடுப்பது என்பது வேறு விஷயம். சிறந்த கிரிக்கெட் என்பது சிவப்பு பந்து கிரிக்கெட்தான். அஸ்வின், கும்பளே மற்றும் ஹர்பஜன் போன்றோர் தொடரின் வெற்றியாளர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts