எங்கள் பேட்டிங் நல்லாலதான்.. ஆனா ஆஸினால இதை செஞ்சிருக்கவே முடியாது.. அடிச்சு சொல்றேன் – கவாஸ்கர் பேட்டி

0
440

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிவடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்றது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழையால் ஆட்டம் அவ்வப்போது பாதிக்கப்பட்ட நிலையில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள், அதற்குப் பிறகு முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 260 ரன்கள் குவித்தது.

அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்த ஆஸ்திரேலியா ஐந்தாவது நாளில் ஏழு விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதாவது ஐந்தாவது நாளில் 54 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா இந்திய அணிக்கு நிர்ணயித்தது. அதாவது 54 ஓவர்களுக்கு உள்ளாக இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி விடலாம் என்கிற கணக்கில் டிக்ளர் செய்ததா? என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இடம் கேட்கப்பட்டது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இதை செய்திருக்க முடியாது

அதற்கு பதில் கூறிய சுனில் கவாஸ்கர் ” நிச்சயமாக இல்லை இந்தியாவை இரண்டாவது இன்னிங்ஸில் அவ்வளவு எளிதாக ஆட்டமிழக்கச் செய்திருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். எங்களது பேட்டிங் அழகாக இல்லை எல்லோரும் நன்றாக இல்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக 50 ஓவர்களில் நாங்கள் நிச்சயமாக ஆட்டம் இழந்து இருக்க மாட்டோம். ஆனால் ஆஸ்திரேலிய அணியும் 445 ரன்கள் குவித்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:தப்பித்ததா இந்திய அணி.? டிராவிஸ் ஹெட் காயம்.. அடுத்த போட்டியில் ஆடுவாரா.. அவரே கூறும் விளக்கம்

இந்திய அணி கடைசி விக்கெட்டில் வெளிப்படுத்திய உறுதியை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். பும்ரா ஒரு பந்துவீச்சாளர், பேட்ஸ்மேன் சிந்தனையாளர். அவரைப் போன்ற ஒரு வீரரை தக்க வைத்துக்கொள்ள எந்த கேப்டனும் விரும்புவார். மேலும் அவர் ஆகாஷ் தீப்பை சிறப்பாக வழி நடத்தினார். மேலும் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காட்டிய உறுதி மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பலனை கொடுக்கும். அடிலெய்டில் இந்தியா தோற்றது. அவர்கள் இந்த டெஸ்டில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் மீதமுள்ள இரண்டு டெஸ்ட்களும் இல்லாமல் போயிருக்கும்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -