அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவ ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக குறிப்பிட்ட ஐந்து கிரிக்கெட் நாடுகள் பேசும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷீத் அலி குற்றம் சாட்டி இருக்கிறார்.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. மாறாக இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கையில் வைத்து நடத்தப்பட்டது. தற்பொழுது சாம்பியன்ஸ் டிராபிக்கும் இப்படியான ஹைபிரிட் மாடலில் நடத்த இந்தியா கேட்டு வருகிறது.
அதே சமயத்தில் பாகிஸ்தான் மிக உறுதியாக இந்தியா அவர்களது நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும் என்று கூறிவிட்டது. மேலும் பெரிய தொகை கொண்டு கிரிக்கெட் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இந்தத் தொடரில் இந்தியா விளையாடவில்லை என்றாலோ அல்லது பாகிஸ்தான் செல்லவில்லை என்றாலும் அவர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.
இப்படியான சூழலில் பாகிஸ்தான் முன்னால் வீரர் பஷீர் அலி இந்தியா சொல்வதை 5 கிரிக்கெட் வாரியங்கள் கேட்கும் என்றும், ஏனென்றால் இந்தியா ஐபிஎல் தொடர் மூலமாக அந்த ஐந்து நாடுகளுக்கு பெரிய தொகையை கொடுத்து வருகிறது என்றும், எனவே அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே பேசுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பஷீத் அலி கூறும் பொழுது “அந்த ஐந்து கிரிக்கெட் வாரியங்களும் இந்தியா சொல்வதை அப்படியே பின்பற்றுகின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொகசின் நக்விக்கு லாலிபாப் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு வெளியே சாம்பியன்ஸ் டிராபி நடத்தவே முயற்சி செய்வார்கள். இதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடரில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தில் இந்தியா விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் கடைசியில் இந்தத் தொடரை இந்தியாவில் வைத்து நடத்தவே பார்ப்பார்கள்.
இதையும் படிங்க : இனி இந்த வீரருக்கு கலர் ஜெர்சி கிடைக்காது.. நல்லவேளையா அகர்கர் அந்த விஷயத்தை சொல்லிட்டாரு – ஆகாஷ் சோப்ரா பேச்சு
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு வெளியே விளையாட வேண்டும் என்று பிசிசிஐ சொன்னால் அந்த ஐந்து கிரிக்கெட் வாரியங்களும் அவர்களுக்கு ஆதரவாகவே பேசும். இந்த ஹைபிரிட் மாடலுக்கு அவர்கள் சம்மதிப்பார்கள். ஏனென்றால் ஐபிஎல் விளையாடும் பொழுது இந்த நாடுகளுக்கு பெரிய பணம் கிடைக்கிறது. இது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து என எல்லா கிரிக்கெட் போர்டுகளுக்கும் கிடைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.