இனி இந்த வீரருக்கு கலர் ஜெர்சி கிடைக்காது.. நல்லவேளையா அகர்கர் அந்த விஷயத்தை சொல்லிட்டாரு – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
270
Akash

நேற்று இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள். நேற்று அவர்கள் வெளியிட்ட விஷயங்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாததற்கு காரணம் அவர் அடிக்கடி காயம் அடையக் கூடியவராக இருக்கிறார் என்று கூறப்பட்டது. மேலும் கில் மூன்று வடிவ கிரிக்கெட் வீரராக இருக்கிறார் என்றும் அதனால் அவர் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார் என்றும் விளக்கம் சொன்னார்கள்.

- Advertisement -

மேலும் தங்களால் பதினைந்து பேர் கொண்ட அணியை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் ருதுராஜ் போன்ற வீரருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை என்றும், மேலும் சூரியகுமார் யாதவ் சிறந்த கிரிக்கெட் மூளை கொண்டவர் அதனால் அவருக்கு டி20 கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது, மேலும் அவரை ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் தேர்வு செய்ய யோசிக்க வில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். அந்த இடத்திற்கு அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக இனி ரவீந்திர ஜடேஜா இந்திய கிரிக்கெட்டின் கலர் ஜெர்சியை அணிய மாட்டார், சென்னை அணிக்காக மட்டுமே அவர் கலர் ஜெர்சியை அணிவார் என்று பேசப்பட்டது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து கூறியிருக்கும் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ரவீந்திர ஜடேஜாவை தேர்ந்தெடுக்காத காரணம் குறித்து அணியை தேர்வு செய்யும் பொழுதே விளக்கி இருக்க வேண்டும் என அகர்கர் கூறியிருந்தார். இதன் காரணமாக வெளியே நிறைய யூகங்கள் இருந்தது. அவர் இனி கலர் ஜெஸ்ஸியில் இந்திய அணிக்காக விளையாட மாட்டார் சென்னை அணிக்காக மட்டுமே விளையாடுவார் என்று பேசி வந்தார்கள்.

இதையும் படிங்க : எல்லாத்துக்கும் இவரைத்தான் குறை சொல்லுவாங்க.. 3 வருஷத்துல என்ன பண்ணி இருக்காருன்னு பாருங்க – அஸ்வின் பேட்டி

இருந்த போதிலும் கூட புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் இருவரும் இதில் எந்த வித டென்ஷனும் ஆக வேண்டாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். தற்போது வரிசையாக பங்களாதேஷ் நியூசிலாந்து ஆஸ்திரேலியா என டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாகவே அவர்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். இதனால் அவருடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதே சமயத்தில் சூரியகுமார் யாதவை ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்ய யோசிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி விட்டார்கள்” என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -