பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி என்னும் மினி உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளது. இதில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி பாபர் அசாம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் சிறந்த வீரர்கள்
பாகிஸ்தான் அணியில் இன்சமாம் முல்ஹாக், ஷாகித் அப்ரிடி, வாசிம் அக்ரம், சோயப் அக்தர் என நட்சத்திர வீரர்களுக்குப் பிறகு உலகம் அறியும் வீரராக பார்க்கப்படுபவர் முன்னாள் கேப்டன் பாபர் அசாம். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு கேப்டனாக இவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக தனது சிறந்த செயல்பாட்டால் உலகம் அறியும் வீரராகத் திகழ்ந்து வருகிறார்.
பேட்டிங் நுணுக்கத்தில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்தான் பாபர் அசாம். இவருக்கு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் உட்பட ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி சாகித் அப்ரிடிக்கு பிறகு இந்தியா உட்பட உலகம் அறிகின்ற வீரராக கருதப்படுபவர் பாபர் அசாம் என சில கருத்துக்களை கூறி பாராட்டி பேசி இருக்கிறார்.
அப்ரிடிக்கு பிறகு கவனம் ஈர்த்தவர்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சாஹித் பாய்க்கு பிறகு இந்தியா உட்பட உலகம் ஈர்த்த வீரராக பார்க்கப்படுபவர் பாபர் அசாம் தான். ஒரு வழக்கமான பேட்ஸ்மேன் இது போன்ற கைத்தட்டல்களை பெறுவது என்பது மிகவும் அரிது. அவர் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். என்ன செய்யவில்லை என்பதில் தான் நீங்கள் அதிகமான கவனம் செலுத்துகிறீர்கள். எனவே அவரது செயல் திறனில் என்ன செய்துள்ளார் என்பதை பாருங்கள். மூன்று வடிவங்களிலும் அவர் எடுக்கும் ரன்கள் என்பதே மிகவும் அற்புதமானவை.
இதையும் படிங்க:சம்மதம் தெரிவித்ததா பிசிசிஐ.? ஜெர்சியில் பாக் லோகோவை பதிய மறுப்பு.. பிரச்சனையை முடித்த ஐசிசி.. நடந்தது என்ன?
எனவே அவருக்கு நாம் உரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும். ஆனால் பாபரின் கேப்டன்ஷிப்புக்காக நான் அவரை விமர்சித்து இருக்கிறேன். இவ்வளவு காலம் கேப்டனாக இருந்த அவர் இந்த காலகட்டத்தில் ஒரு சிறந்த அணியை உருவாக்கி இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் அதுவே அவரது பேட்டிங் என்று வரும்போது தயவு செய்து இது போன்ற விமர்சனங்களை முன் வைக்காதீர்கள் என்று நான் சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.