சம்மதம் தெரிவித்ததா பிசிசிஐ.? ஜெர்சியில் பாக் லோகோவை பதிய மறுப்பு.. பிரச்சனையை முடித்த ஐசிசி.. நடந்தது என்ன?

0
119

பாகிஸ்தானில் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணிந்து விளையாடும் ஜெர்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அந்த ஜெர்சியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் லோகோவை பதிவு செய்யாமல் வெளியாகிய ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அது தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

லோகோவை பதிய மறுப்பு தெரிவித்த பிசிசிஐ

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளும் அணிகளில் ஒன்றான இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறாமல் துபாயில் நடக்க உள்ளது. பாகிஸ்தானில் சில பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் வைத்துக் கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அணிந்து விளையாடும் ஜெர்சி அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் அதில் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் லோகோவை பதிவிடாமல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை இந்திய அணி நடத்திய நிலையில் அதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணி இந்திய லோகோவை அணிந்து விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐசிசி வழிகாட்டுதலை பின்பற்றுவோம்

இந்த சூழ்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முக்கிய அதிகாரி ஒருவர், பிசிசிஐ செய்தது ஏற்கத்தக்கது அல்ல இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு சுமூக முடிவை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனக் கூறியிருந்தார். எனவே ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்திய அணி அதன் ஜெர்சியில் பாகிஸ்தான் லோகோவை பதிந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:ரோகித் சர்மா ரஞ்சி ஆடுகிறாரா.. அணிக்குள் என்ன நடக்கிறது? – மும்பை கேப்டன் ரகானே பேட்டி

இதன்படி க்ரிக் பஸ்ஸில் வெளிவந்துள்ள அறிக்கையின்படி “இந்திய ஜசிசி விவகாரத்தில் நாங்கள் ஐசிசி வழிகாட்டுதல்களை நிச்சயமாக பின்பற்றுவோம்” என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறியிருக்கிறார். இதன் மூலமாக இந்திய அணி பாகிஸ்தான் லோகோவை அணிந்து விளையாடும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரின் அறிமுக விழாவில் கலந்து கொள்வதை இன்னும் பிசிசிஐ உறுதி செய்யவில்லை அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -