சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் தென்னாப்பிரிக்கா வீரரை விராட் கோலிக்கு நிகரானவர் என ஒப்பிட்டு சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
விராட் கோலிக்கு நிகரான வீரர்
இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான விராட் கோலி இதுவரை 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் குவித்து, சாதனை மகுடத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இருக்கிறார். மேலும் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 50-க்கும் அதிகமான சதங்கள் மற்றும் 70-க்கும் அதிகமான அரை சதங்கள் அடித்து இந்திய அணியின் மகத்தான கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.
இந்த நிலையில் விராட் கோலி கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து மீண்டும் தான் ஒரு சிறந்த சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னால் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் தென்னாபிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஹென்றிச் கிளாசனை இந்திய வீரர் விராட் கோலியுடன் ஒப்பிட்டு சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
அவர் ஒரு ரத்தினம்
இந்த இருவர் குறித்து அவர் கூறும் போது ” இந்த நேரத்தில் கிளாசன் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் பிரிப்பது கடினம். சிலருக்கு ஹென்றிச் கிளாசின் நம்பர் ஒன் இடத்தில் இருப்பார். அதேபோல சிலருக்கு விராட் கோலி நம்பர் ஒன் இடத்தில் இருப்பார். இது ஒரு பொருட்டல்ல. என்னைப் பொறுத்தவரை இரண்டுமே தற்போது சமமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கிளாஸன் தென்னாப்பிரிக்கா அணியின் ரத்தினமாக திகழ்கிறார். அது சுழலாக இருந்தாலும் சரி யாரும் சுழற் பந்துவீச்சாளர்களை பேக் புட்டில் நின்ற இடத்தில் சிக்ஸர் அடிப்பதில்லை.
இதையும் படிங்க:இந்திய ஜாம்பவானின் ஆல் டைம் ரெகார்டை உடைத்த விராட் கோலி.. முதல் இடம் பிடித்து சாதனை.. இந்தியா ஆஸி செமி பைனல்
மேலும் உலகில் உள்ள எந்த பந்துவீச்சாளரையும் அவரால் இறங்கி வந்து அடிக்கவும் முடியும். எனவே தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை அவர்களது பேட்டிங் மிக ஆழமாக உள்ளது. நியூசிலாந்து அணி இடமும் பேட்டிங் ஆழம் இருக்கிறது என்றாலும், பந்துவீச்சை பொறுத்தவரை தென்னாபிரிக்க அணி வலுவாக இருப்பது போல் உள்ளது. இறுதிக்கட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு சிறப்பாக பந்து வீசும் பவுலர்கள் இல்லாதது குறை. இதை இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அப்படியே தெரிந்தது. எனவே அடுத்த போட்டியில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என பேசி இருக்கிறார்.






