இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் அரை இறுதி ஆட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் விராட் கோலி முன்னாள் ஜாம்பவானின் ஆல் டைம் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அரை இறுதி
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிக்க, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 96 பந்துகளை எதிர்கொண்டு 73 ரன்கள் குவித்தார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஆட்டத்தின் 27வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீச, அப்போது களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜாஸ் இங்கிலீஷ் விராட் கோலியால் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். 12 பந்துகளை எதிர் கொண்டு விளையாடிய ஜாஸ் இங்கிலீஷ் 11 ரன்னில் விராட் கோலியால் கேட்ச் பிடிக்கப்பட்டார். அப்போது விராட் கோலி இந்த கேட்ச் மூலமாக புதிய சாதனை ஒன்றைப் படைத்தார்.
விராட் கோலி சாதனை
அதாவது ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ பார்மெட்டிலும் 335 கேட்சுகள் பிடிக்கப்பட்டு அதிக கேட்ச்கள் பிடித்தவரான இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார். இதுவரை ராகுல் டிராவிட் மூன்று வடிவ பார்மெட்டிலும் 334 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதனை விராட் கோலி தற்போது இந்த போட்டியின் மூலமாக முறியடித்து இந்திய வீரராக முதல் இடத்தில் முன்னேறி இருக்கிறார்.
இதையும் படிங்க:ரூல்ஸை மதிங்க.. டேப் அணிந்து பந்து வீச சென்ற ஜடேஜா.. தடுத்த கள நடுவர்.. கிரிக்கெட் விதி சொல்வது என்ன.?
மேலும் இறுதியாக நாதன் எல்லிசின் கேட்சையும் பிடித்து தனது 336 ஆவது கேட்சை விராட் கோலி பதிவு செய்திருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.