ஆசிய கோப்பை நடந்த விதம் அவமானம் ஆனது.. இப்படி செய்யாதீங்க – இந்திய முன்னாள் வீரர் வருத்தம்

0
243
Surya

ஆசியக் கோப்பையில் நடந்த சம்பவங்கள் வருத்தமாக இருப்பதாகவும் விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது எனவும் இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி கூறியிருக்கிறார்.

கபில்தேவ் தலைமையில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்ற பொழுது இந்திய அணியில் விக்கெட் கீப்பராக சையத் கிர்மானி இடம் பெற்று இருந்தார். மிகவும் மூத்த வீரரான இவர் இந்தியா பாகிஸ்தான் என இரு அணிகள் நடந்து கொண்ட விதம் குறித்தும் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

வெட்கமாக இருக்கிறது

அவர் பாகிஸ்தான் அணியை மட்டும் குற்றம் சொல்லாமல் இந்திய அணியும் இந்திய அணி கேப்டன் நடந்து கொண்ட விதமும் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் பேசி இருக்கிறார். காலத்தில் எந்த அளவில் இருநாட்டு வீரர்களும் ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது குறித்தும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சையத் கிர்மானி பேசும் பொழுது “என் நண்பர்களுடைய கருத்துக்களை கேட்கும் பொழுது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. அவர்கள் என்னிடம் உங்களுடைய கிரிக்கெட் காலம் வேறு ஆனால் தற்போது வேறாக இருக்கிறது, தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட்டில் ஜென்டில்மேன்தனம் எங்கு காணாமல் போனது?” என்று கேட்கிறார்கள்.

- Advertisement -

மிகவும் வருத்தமாக இருக்கிறது

“மிகக்குறிப்பாக விளையாட்டில் கிரிக்கெட்டில் விஷயங்கள் சென்று கொண்டிருக்கும் விதம் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தற்போது நடந்திருக்கும் விஷயங்கள் சரியானது கிடையாது. பொதுவாக விளையாட்டில் அரசியலை தள்ளி வைக்க வேண்டும். வெளியில் என்ன நடந்ததோ அதை நீங்கள் விட்டுவிட வேண்டும்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் ஆசிய கோப்பையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது.. நாங்க எதுவும் செய்யல – சூரியகுமார் பேட்டி

“அரசியல் காரணங்களுக்காக கிரிக்கெட்டை அர்ப்பணிக்காதீர்கள். எங்கள் காலத்தில் வீரர்கள் மிகவும் அற்புதமான தோழமையுடன் இருந்தார்கள். பாகிஸ்தான் வீரர்கள் இங்கு வந்தார்கள் நாங்கள் அங்கு சென்றோம். எல்லா பக்கத்திலும் சிறப்பான வரவேற்பும் அன்பும் பாசமும் பரிமாறப்பட்டது. தற்போது ஒரு கிரிக்கெட் வீரராக நான் தலை குனிகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -