இந்தியா B டீம் கூட பாகிஸ்தான் அணியை சும்மா ஜெயிக்கும்.. புது ராஜாக்கள் வந்துட்டாங்க – இந்திய முன்னாள் வீரர் கருத்து

0
85
Wassan

இந்திய அணியின் பி டீம் கூட தற்போதைய பாகிஸ்தான் அணியை மிகச் சுலபமாக வீழ்த்தி விடும் என இந்திய முன்னால் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன் தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி நடைபெற இருப்பதால், இதை ஒட்டி இரு தரப்பிலும் பரபரப்பான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவுவதால் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

உலக சாம்பியன் இந்தியா

தற்போது டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணி உலக சாம்பியன் ஆக இருந்து வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணியை விட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி பேட்டிங்கில் மிகவும் ஆக்ரோஷம் காட்டக்கூடிய அணியாக இருக்கிறது. மேலும் பயிற்சியாளர் கம்பீர் வித்தியாசமான முடிவுகளை எடுக்கிறார்.

நிறைய இளம் வீரர்கள் இடம் பெற்று இருப்பதால் அணியின் மனநிலை மிகவும் தைரியமாக இருக்கிறது. மேலும் அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அளவில் சாதித்திருக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் மற்ற அணிகளை விட பலம் வாய்ந்த சிறந்த அணியாக இருக்கிறது.

- Advertisement -

இந்தியா பி டீம் ஜெயிக்கும்

இதுகுறித்து அதுல் வாசன் பேசும்பொழுது “இந்தியாவின் பி அணி கூட இந்த பாகிஸ்தான் அணியை தோற்கடித்து விடும். ஏனென்றால் தற்போது விஷயங்கள் மாற ஆரம்பித்துவிட்டது. நாங்கள் விளையாடிய காலகட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகவும் சிறப்பாக இருந்தது. இப்போது பாகிஸ்தான் அணி அப்படி இல்லை. மேலும் நான் ரோகித் சர்மா விராட் கோலியை மிஸ் செய்ய மாட்டேன். அப்படி அவர்கள் இல்லை என்று நினைத்தால் நான் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டே இருக்க வேண்டியதுதான்”

இதையும் படிங்க : ஹர்திக் திறமைய நம்பறதில்ல .. பேட்டிங் பயிற்சியும் செய்ய மாட்டார்.. அவர் வேலையே இதுதான் – அபிஷேக் நாயர் பேச்சு

“ஒரு ராஜா போய்விட்டார், புதிய ராஜா வருகிறார். நாம் புதிய ராஜாவுக்கு வாழ்க என்று சொல்கிறோம். தற்போது இந்திய அணிக்கு புதிய சூப்பர் ஸ்டார்கள் வருகிறார்கள். தேர்வாளர்களுக்கு மிகவும் சங்கடம் தரக்கூடிய சந்தோசமான விஷயம். ஏனென்றால் தற்போது இந்திய கிரிக்கெட்டில் நிறைய திறமைகள் இருக்கிறது. எனவே யாரை தேர்வு செய்வது யாரை கைவிடுவது? என்பது மிகவும் கடினமானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -