டி20 உலகக் கோப்பை 2024

விராட் கோலி செஞ்ச வேலையால.. சாம்சன் அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாட மாட்டார்- அமித் மிஸ்ரா பேட்டி

நடப்பு டி20 உலக கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணி அடுத்ததாக தங்களது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை நடத்தவிருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா சஞ்சு சாம்சன் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

நடப்பு டி20 உலக கோப்பையை வென்ற கையோடு அணியின் முன்னணி வீரர்கள் ஆன விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இதனால் இந்திய அணி அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக சரியான அணியை கட்டமைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இளம் வீரர்களை அனுப்பியது.

இந்த சூழ்நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் பங்கேற்றாலும் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு 29 வயதாவதால் அடுத்த உலக கோப்பையில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. அடுத்த உலகக் கோப்பை வருவதற்குள் அவருக்கு 30 அல்லது 31 வயது ஆகிவிடுவதால் இனி டி20 தொடரில் இனி வயதான வீரர்கள் விளையாட கூடாது என விராட் கோலி ரூல் கொண்டு வந்ததாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அமித் மிஸ்ரா விரிவாக கூறும்பொழுது “சஞ்சு சாம்சன் அடுத்த டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர் தற்போது மூத்த வீரர் ஆகிவிட்டார். இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்கள் குவிந்து விட்டனர். டி20 தொடரில் இளம் வீரர்கள்தான் விளையாட வேண்டும் என்று விதிமுறையை விராட் கோலி கொண்டு வந்தார். இளம் வீரர்கள் அதிகமாக செயல்படுகின்றனர். இப்போது இந்திய அணிக்கு அவர்கள் போன்ற இளம் வீரர்கள் தான் அதிகம் தேவை.

சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் அபாரமாக விளையாட வேண்டும். அடுத்த உலக கோப்பையில் இடம் பெற இரண்டு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வர வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் மட்டுமே அவரை பரிசீலிக்க முடியும். ஆனால் ரிஷப் பண்ட், ஜூரேல், ஜித்தேஷ் சர்மா என்று பல இளம் வீரர்கள் டி20 தொடருக்கு தயாராக இருக்கிறார்கள்” என்று அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:உம்ரான் மாலிக்கை நீக்கிய காரணம் இதான்.. இப்ப அவர் இதான் பண்ணிட்டு இருக்காரு – இந்திய பவுலிங் கோச் விளக்கம்

அமித் மிஸ்ராவின் இந்த கருத்தை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதைப் போலவே சஞ்சு சாம்சன் இனிவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அவருக்கான இடம் குறித்து பிசிசிஐ பரிசீலிக்கும். இதனால் இனி வரும் தொடர்களில் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

- Advertisement -
Published by