இந்திய கிரிக்கெட்டின் அதிவேக வந்து வீச்சாளராக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் இருக்கிறார். சிறந்த வேகத்தை கொண்டு இருந்தாலும் கூட இந்திய அணியில் இருந்து சில காலமாக நீக்கப்பட்டிருக்கிறார். அவர் ஏன் நீக்கப்பட்டார்? தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பது குறித்து இந்திய முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இருந்து நேரடியாக டிராவிட் பயிற்சி காலத்தில் அர்ஸ்தீப் சிங், மற்றும் இம்ரான் மாலிக் இருவரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு முதலில் உம்ரான் மாலிக்குக்கு கொடுக்கப்பட்டது. அவர் இந்திய டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடினார்.
அவரிடம் வேகம் நன்றாக இருந்த போதும் கண்ட்ரோல் இல்லாத காரணத்தினால் நிறைய ரன்களுக்கு சென்றார். இதன் காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இத்தோடு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் இந்த முறை பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் வெளியில் உட்கார வைக்கப்பட்டார்.
தற்போது இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னால் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்பிரே கூறும்பொழுது “அவர் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எக்ஸ்பிரஸ் வேகம் என்பது ஒருவருடைய தனித் திறன். அவர் நல்ல வேகத்தில் மணிக்கு 148 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் போது, ஸ்பீடு கன்னில் 160 கிலோமீட்டர் வேதம் காட்டும். எனவே நான்இதையெல்லாம் நம்புவது கிடையாது. நாம் அவருடைய பலம் வேகம் என்று புரிந்து கொள்கிறோம்.
உம்ரான் மாலிக் நிச்சயமாக வேகமாக பந்து வீசக்கூடியவர். அவர் தொடர்ந்து 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் அடித்து வீசக்கூடியவர். ஆனால் அவர் எப்படி செய்கிறார்? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் பொழுது பந்துவீச்சில் உங்களுக்கு கண்ட்ரோல் இல்லை என்றால் நீங்கள் சிரமப்படுவீர்கள். ஒருமுறை நீங்கள் கேப்டனிடம் நம்பிக்கை இழந்து விட்டால் பிறகு எல்லாம் கடினம் ஆகிவிடும்.
இதையும் படிங்க : 4 ஓவர் 13 ரன்.. மேஜிக் காட்டும் ஷாருக்கான்.. 8 பேர் சிங்கிள் டிஜிட்.. திருச்சியை மடக்கி கோவை வெற்றி.. டிஎன்பிஎல் 2024
எனவே உம்ரான் மாலிக் பந்துவீச்சில் கண்ட்ரோல் கொண்டு வர வேண்டும். இதற்கு அவர் உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இதற்காகத்தான் அவரை ரஞ்சி கிரிக்கெட் விளையாடச் சொல்லித் தள்ளுகிறோம். அவர் ஒரு ரஞ்சி சீசன் முழுமையாக விளையாடும் பொழுது, அழுத்தத்திலும் சிறப்பாக செயல்படும் திறனை பெற்று இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.






