விராட் கோலி கிடையாது.. ஆர்சிபி அணியின் உண்மையான ஹீரோ அவங்க தான்.. 4 வெற்றி சாத்தியமே இல்ல – சஞ்சய் மஞ்சுரேக்கர் விளக்கம்

0
76

நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் உண்மையான ஹீரோ விராட் கோலி கிடையாது என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஆச்சரியமான தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி முதலிடம்

நடப்பு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் 7 போட்டிகள் வெற்றி மற்றும் மூன்று போட்டிகள் தோல்வி என புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் கம்பீரமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ஆர்சிபி அந்த அணி நிர்ணயித்த 162 ரன்கள் இலக்கை 18.3 ஓவர்களிலேயே சேச்சிங் செய்து வெற்றி பெற்றது.

அதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 51 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தார். மேலும் மொத்தமாக இந்த தொடரில் 6 அரை சதங்கள் விராட் கோலி அடித்திருக்கும் நிலையில் பெங்களூர் அணியின் உண்மையான ஹீரோ அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் தான் என சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

உண்மையான ஹீரோ அவங்க தான்

இதுகுறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறும் போது “பெங்களூர் அணி வெற்றி பெற்ற 7 போட்டிகளில் 4 போட்டிகள் சேசிங் செய்து வெற்றி பெறப்பட்டுள்ளன. அப்போது எதிர் அணிகள் பெங்களூர் அணிக்கு நிர்ணயித்த இலக்குகள் முறையே 174, 175, 157 மற்றும் 162 ஆகும். எனவே இவை கடினமான இலக்குகள் கிடையாது. பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசையை பார்க்கும் போது இது எளிதான வெற்றி பெறக் கூடிய இலக்குகள் தான்.

இதையும் படிங்க:ஓவரா சொல்ல வேண்டாம்.. மயாங்க் யாதவ்கிட்ட ஸ்பெஷல் விஷயம் ஒன்றும் இல்லை.. சாதாரண பவுலர்தான் – மும்பை ஸ்டார் வீரர் பேட்டி

எனவே அந்த அணியின் உண்மையான ஹீரோ அவர்களது பந்துவீச்சாளர்கள் தான்” என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார். பெங்களூர் அணி எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து தரமான பந்துவீச்சாளர்களை இறக்கி இருக்கிறது. இந்திய தரம் வாய்ந்த பவுலர் புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஹாசில் வுட் சுழற் பந்துவீச்சாளர்கள் குருனால் பாண்டியா மற்றும் சுயாஸ் ஷர்மா போன்ற நல்ல பந்துவீச்சாளர்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -