நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராவின் உத்தப்பா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியா கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணியின் சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் மோசமான நிலைமையில் இருந்தது. மேலும் அவர் இந்திய அணிக்காக கடந்த 25 இன்னிங்ஸ்களில் பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.
இதனால் வரக்கூடிய நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது பார்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டிய நிலைமையில் சூரிய குமார் இருக்கிறார். ஏனென்றால் அதற்குப் பிறகு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் ஒரு கேப்டனின் பார்ம் என்பது இந்திய அணிக்கு மிக முக்கியமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தற்போதைய சூரியக்குமார் நிலைமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “தோனி அப்போது சிறந்த பார்மில் இல்லை என்பது எனக்கு நினைவிருக்கிறது. நான் தவறாக நினைக்கவில்லை என்றால் அவர் 2011ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் ஒன்று அல்லது இரண்டு அரை சதங்களுக்கு மேல் அவர் அடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இறுதிப்போட்டியில் மட்டும் அவர் சிறப்பாக விளையாடினார். அணிகள் நல்ல பார்மில் இல்லாத முக்கியமான வீரர்களை எடுத்துச் சென்றுள்ளன.
இதையும் படிங்க:16வது வீரரை வச்சிருக்க முடிஞ்சும் ஏன் வைக்கல?.. ஐபிஎல் ஹைதராபாத் ஸ்டைலில் பண்ணாதீங்க – ராபின் உத்தப்பா பேச்சு
ஏனென்றால் அவர்கள் தங்கள் திறமையினால் செயல்படக்கூடியவர்கள் மேட்ச் வின்னர்கள். சூரியகுமார் ஃபார்ம் அவுட் இருக்கிறார் என்று நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் வீரர்கள் ரன்கள் எடுக்க தடுமாறும்போது அவர்கள் ஃபார்மில் இல்லை என்று கூறுவது தவறு. சூர்யா இந்த தொடரில் வலைப் பயிற்சியில் சிறப்பாக பேட்டிங் செய்ததை பார்த்தேன். அவர் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறாரோ அதே மாதிரி தான் விளையாடி வருகிறார். எனவே அவர் திரும்பவும் தனது நிலைமைகளை மீண்டும் பெறுவார்” என்று பேசி இருக்கிறார்.