இந்திய டி20 அணியில் ஆரம்பத்தில் இருந்து ரிங்கு சிங்கை வைத்திருக்க முடிந்தும் அதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் செய்யவில்லை என ராபின் உத்தப்பா விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது கில் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய இடத்திற்கு இஷான் கிஷான் மற்றும் ரிங்கு சிங் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஏன் சேர்க்கவில்லை?
ஐசிசி தொடர்களுக்கு மட்டுமே 15 பேர் கொண்ட வீரர்கள் மட்டுமே இருக்கும் அணியை கொண்டு செல்ல முடியும். அதுவே இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடர்களுக்கு 17 வீரர்கள் வரையில் அணியில் இடம்பெறலாம். தற்போது இதை வைத்து ராபின் உத்தப்பா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது “ரிங்கு சிங் உங்களது அணியில் ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான தொடரில் ரிங்கு சிங்கை நீங்கள் அணியில் வைத்திருக்க வேண்டும். இப்படியான தொடர்களில் 17 வீரர்கள் வரையில் வைத்திருக்கலாம். நீங்கள் ஏன் அப்படி செய்யாமல் குறைத்தீர்கள்?”
திலக் வர்மாதான் முக்கியம்
“நீங்கள் இருநாட்டு தொடர்களில் 16 முதல் 17 வீரர்களை வைத்து விளையாடி இருந்தால், பிறகு டி20 உலக கோப்பை வரும் பொழுது அதற்கு ஏற்ற வகையில் நீங்கள் அணியை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் அந்த எளிமையான வழியை தவற விட்டு விட்டீர்கள்”
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த விஷயத்துக்கு.. பாகிஸ்தான் கிட்ட உதவி கேட்டு இருக்கு – அகிப் ஜாவேத் தகவல்
“நீங்கள் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடும் ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் ஸ்டைலை பின்பற்றும் பொழுது உங்களுக்கு அது எல்லா நேரத்திலும் பலன் தந்து விடாது. பெரிய போட்டிகளின் போது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இங்கு உங்களுக்கு ஆங்கர் ரோலில் விளையாடக்கூடிய திலக் வர்மா மிகவும் முக்கியமானவர். அவரால் இரண்டு வழிகளிலும் விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.






