தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் தற்போது இந்த தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மான் கில் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது அதற்கு நிரந்தர கேப்டனாக, 26 வயதான சுப்மான் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்காமல் டிரா செய்திருக்கும் நிலையில் தற்போது அவரையே டி20 தொடருக்கு துணை கேப்டன் ஆகவும் இந்திய அணி நியமிக்கப்பட்டிருப்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏனென்றால் டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் இதன் காரணமாக அணியில் கூட இடம்பெறவில்லை. மாற்றாக தற்போதைய டி20 அணியில் கேஎல் ராகுல் அனுபவ வீரராக இருக்கும் நிலையில் அவருக்கும் எந்த கேப்டன் பதவியும் வழங்கவில்லை.கில் துணை கேப்டனாக எதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறித்து மனோஜ் திவாரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கில் இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்பாக சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய தொடக்கம் நன்றாக இருப்பதை பார்த்தோம். பின்னர் அவர்கள் வங்கதேச அணிக்கு எதிராக தொடக்கம் காண்பதை கண்டோம். ஒரு கிரிக்கெட் ரசிகராக நாங்கள் இதை ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. டீம் இந்தியா டி20 ஆட்டத்தில் அந்த மாதிரியான ஒரு அணுகுமுறையை காட்டியதில்லை. எனவே சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி சதமும் அடித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2025.. நோ சொன்ன ஐசிசி.. யுஏஇ போட்டியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறினால் என்ன நடக்கும்?
இந்த நிலையில் எதற்காக கில்லை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்கிற காரணமும் அனைவரும் அறிந்ததே ஆகும். அவர் சொல்வதைக் கேட்க விரும்பும் கேப்டனை கம்பீர விரும்புகிறார் என்பது அதற்கான காரணம் ஆகும். இதுவே ஒரு வெளிப்படையான ரகசியம்” என்று மனோஜ் திவாரி பேசியிருக்கிறார். அதாவது கம்பீர் சொல்வதை கில் முழுமையாக கேட்பார் என்கிற விகிதத்தில் அவர் துணை காப்பனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று மனோஜ் திவாரி கூறியிருக்கிறார்.






