ஆசிய கோப்பை 2025.. நோ சொன்ன ஐசிசி.. யுஏஇ போட்டியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறினால் என்ன நடக்கும்?

0
129

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை பாகிஸ்தான் அணி யுஏஇ அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும்.ஆனால் தற்போது இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற போது போட்டி நடுவராக இருந்த ஆண்டி பயர்கிராப்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு காரணம் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் போது வீரர்கள் யாரும் கைகுலுக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியது தான் பிரச்சனைக்கு காரணம்.

- Advertisement -

ஐசிசி ஒப்புகொள்ளவில்லை:

இதனால் ஆன்டி பயர்கிராஃப்ட் இருந்தால் தாங்கள் இந்த போட்டியில் விளையாடாமல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஐசிசி ஒப்புதல் வழங்கவில்லை என தெரிகிறது.

திட்டமிட்டபடி ஆண்டி பயர்கிராஃப்தான் இருப்பார் என்று கூறியுள்ளது. இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை ஆன்டி பயர்கிராஃப்ட் நாளை போட்டியில் போட்டி நடுவராக செயல்பட்டால் பாகிஸ்தான் அணி புறக்கணிப்பில் ஈடுபடும்.

- Advertisement -

சூப்பர் 4 என்ன ஆகும்:

ஒரு வேலை பாகிஸ்தான் அணி நாளை ஆட்டத்தில் விளையாடவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தற்போது ஏ பிரிவிலிருந்து இந்தியா மட்டும்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது இடத்தில் யுஏஇ அணியும் இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.

இதையும் படிங்க: டி20 உலககோப்பை வென்ற இந்திய வீரர்கள்.. 2 பேர் விசாரணைக்கு ஆஜராக ED உத்தரவு.. என்ன நடந்தது?

ஒருவேளை நாளை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி புறக்கணித்து விட்டால் இரண்டு புள்ளிகள் யுஏஇ அணிக்கு கிடைத்துவிடும். இதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இரண்டாவது அணியாக uae அணிதான் தகுதி பெறும். இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.
இதனால் பாகிஸ்தான் என்ன செய்யப் போகிறது. ஒருவேலை பாகிஸ்தான் வெளியேறினால் ஆசிய கோப்பை தொடருக்கு என்ன நடக்கும் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

- Advertisement -