சிராஜ் டிஎஸ்பியா இருக்கலாம்.. ஆனா பும்ராவுக்கு இதை செய்வது நியாயமே இல்லை – ஹர்பஜன் சிங் பேட்டி

0
156

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய பேட்டிங் வரிசை குறித்து ஆஸ்திரேலியா வீரர் நாதன் லியோன் கேட்ட கேள்வியை ஹர்பஜன் சிங் ஆதரித்து இந்திய ஆணியிடம் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

நாதன் லயன் கேட்ட கேள்வி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கபாவில் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் களம் இறங்கிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 251 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் இழந்து இருந்தது. இதில் குறிப்பாக பேட்டிங் வரிசையை பொருத்தவரை பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஒன்பதாவது இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் பும்ரா 10வது இடத்திலும் களம் இறங்குகிறார்கள்.

அதாவது புள்ளிகளின் அடிப்படையில் பார்த்தால் சிராஜை விட பும்ராவே கடைசி வரிசையில் இறங்கி அதிக ரன்கள் குவித்தவர் ஆக இருக்கிறார். சிராஜின் பேட்டிங் சராசரி அவரை விட குறைவாக உள்ள நிலையில் ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் எதற்காக சிராஜ்க்கு கீழ் பும்ரா இறங்குகிறார் என்ற கேள்வி எழுப்பினார். இதனை கவனித்த இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவரது கேள்வியை ஆதரித்து அதற்கான விளக்கத்தை கேட்டிருக்கிறார்.

- Advertisement -

ஆதரவு தெரிவித்த ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் இது குறித்து கூறும் போது “நாதன் லயன் சரியான கேள்வியை கேட்டார். எந்த ரன்களின் அடிப்படையில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங் வரிசையில் மேலே வருகிறார். அவர் காவல்துறையில் பதவி உயர்வு பெற்றவர் என்று எங்களுக்கு புரிகிறது. ஆனால் இங்கேயும் அவருக்கு பதவி உயர்வு எப்படி கிடைத்தது. அவர் போலீஸ் படையில் பதவி உயர்வு பெற்றதால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையிலும் பதவி உயர்வு பெற்றாரா? என்று கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க:கிளாசனின் அதிரடி ஆட்டம் வீண்.. ஆல் ரவுண்டராக ஜொலித்த பாக் வீரர்.. 3 விக்கெட் வித்தியாசத்தில் பாக் வெற்றி

பும்ரா இந்திய அணி இக்கட்டான சூழ்நிலைகளில் இருக்கும் போதெல்லாம் கடைசி வரிசையில் இறங்கி ஓரளவு சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றி இருக்கிறார் என்பது வெளிப்படையான உண்மை. எனவே சிராஜ் அவருக்கு மேல் பேட்டிங் வரிசையில் இறங்கி எந்த நிலையில் அணியை காப்பாற்றினார் என்று தெரியாத நிலையில் ஹர்பஜன் சிங் தனது கேள்வியை எழுப்பி இருக்கிறார். இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -