பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் ஏற்கனவே தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இறுதிக்கட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய தென்னாப்பிரிக்கா தனது முதல் விக்கட்டுக்கு 9.5 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டோனி ஜார்ஜி 33 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 36 ரன்னில் நடையை கட்டினார்.
அதற்குப் பிறகு மிடில் வரிசையில் அணியின் கேப்டன் மார்க்ரம் 35 ரன்னில் வெளியேற, விக்கெட் கீப்பர் கிளாஸன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 97 பந்துகளை எதிர்கொண்டு ஏழு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 86 ரன்கள் குவித்து சாஹின் அப்ரிடி பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சல்மான் ஆகா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் வீரர்
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சபீக் டக் அவுட் ஆகி வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சாயிம் ஆயுப் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இருப்பினும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான பாபர் அசாம் 23 ரன்னிலும், கேப்டன் ரிஸ்வான் ஒரு ரன், கம்ரான் குலாம் 4 ரன்னில் வெளியேற, பந்து வீச்சில் கலக்கிய சல்மான் ஆகா சாயிமுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க:17 பவுண்டரி.. 85 ரன்.. வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை அபார ஆட்டம்.. 2வது டி20யில் இந்திய அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்
தொடக்க ஆட்டக்காரர் ஆயூப் 119 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 109 ரன்கள் குவிக்க, மிடில் வரிசை ஆட்டக்காரரான சல்மான் ஆகா 90 பந்துகளை எதிர்கொண்டு நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இறுதியில் பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டிலும் கலக்கிய சல்மான் ஆகா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.






