இன்று பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி.. இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விவரம்

0
1305

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்தியாவில் இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளிவந்துள்ளன.

- Advertisement -

பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி தர்பனில் உள்ள கிங்ஸ் மீட் மைதானத்தில் இன்று இரவு 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் நல்ல பதிவை வைத்திருக்கிறது. இதுவரை இந்த இரண்டு அணிகள் மோதிய 22 டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க அணிக்கு ஹென்றிக்ஸ் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.

மார்க்ரம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய நிலையில் இந்தத் தொடரில் அவர் பங்கு பெறவில்லை. வேகப்பந்துவீச்சாளரான ரபாடாவும் இதில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அனுபவம் வாய்ந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் சவால் அளிக்கக்கூடிய வகையில் இருப்பார்கள். முகமது ரிஸ்வான் தலைமையில் ஆன பாகிஸ்தான் அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடிய போது அதில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்

இன்று இரவு முதல் டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்தியாவில் அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல் வெளிவந்துள்ளது. இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு நடைபெற உள்ள இந்தப் போட்டியில் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஜியோ சினிமா இணையதளத்திலும் இந்த போட்டிகளை கண்டுகளிக்கலாம்.

இதையும் படிங்க:கங்குலி டிராவிட் இல்லை.. எங்கள் ஆல் டைம் பேவரைட் இந்திய வீரர் இவர்தான்.. முன்னணி ஆஸி வீரர்கள் தேர்வு

முதல் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இரண்டாவது போட்டி வருகிற 13-ஆம் தேதியும் மூன்றாவது போட்டி 14ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு ஒரு நாள் போட்டிகள் வருகிற 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அதற்குப் பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 26 ஆம் தேதி முதல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான அன்ரிச் நார்ட்ஜே மற்றும் தப்ரைஸ் ஷம்சி மற்றும் ஆல்-ரவுண்டர் ஜார்ஜ் லிண்டே ஆகியோர் தென்னாப்பிரிக்கா அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

- Advertisement -