டி20 உலகக் கோப்பை 2024

விராட் கோலி சீக்கிரம் அவுட் ஆக காரணமே இவர்தான்.. ஒரு விஷயத்தை கோலி புரிஞ்சுக்கணும்- ரவி சாஸ்திரி பேட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விரைவிலேயே வெளியேறிய விராட் கோலி குறித்து ரவி சாஸ்திரி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குறித்தது. குறிப்பாக சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 39 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்தார். இவருக்கு பின்னால் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 47 ரன்களும், துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 23 ரன்களும் குவித்தனர்.

இந்தப் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விராட் கோலி முதல் ஆறு பந்துகளை பொறுமையாக எதிர்கொண்ட நிலையில், ஏழாவது பந்தில் டாப்லீயின் ஓவரில் மிட் விக்கெட் திசையில் ஒரு அபாரமான சிக்சரை விளாச, விராட் கோலி தனது பழைய பார்முக்கு வந்துவிட்டார் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தவுடன் அதற்கு அடுத்த பந்தில் விரைவாக ரன்கள் குவிக்க போய் போல்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

தொடக்க ஆட்டம் முதல் தற்போது வரை மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் விராட் கோலி தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறார். இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்த போட்டியில் கோலியின் பார்ம் என்பது அவசியமான ஒன்றாக மாறுகிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரி விராட் கோலி குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து சாஸ்திரி விரிவாக கூறும்பொழுது “விராட் கோலியின் ஆட்டம் இதுவல்ல. அவர் விரைவாக ரன்கள் குவிக்க போய் தனது விக்கட்டை பறி கொடுக்கிறார். ஏனென்றால் மறுமுனையில் அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ரோஹித் ஆக்ரோஷமாக விளையாடுவதால் விராட் கோலியும் அதற்கு முயற்சி செய்து விரைவிலேயே ஆட்டம் இழக்கிறார். அவர் சிறிது நேரம் களத்தில் நின்றால் தனது பழைய பார்மை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். அவர் தனது பழைய பாணியில் விளையாட மறுப்பதால்தான் இவ்வாறு வெளியேறுகிறார்.

இதையும் படிங்க:இது 2022 இல்லனு இந்தியா காட்டிட்டாங்க.. அவங்க அந்தவொரு விஷயத்துல கில்லாடிங்க – ஜோஸ் பட்லர் பேச்சு

தற்போது பேட்டிங் ரிதம் சரியாக கோலிக்கு அமையவில்லை. அவரது எல்லையில் பந்து விழுந்தால் அவர் அதை தாராளமாக முயற்சி செய்யலாம். ஆனால் அவர் ஷாட்களை உருவாக்க முயற்சிக்கிறார். நீங்கள் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கும்போது அவ்வாறான ஷாட்களை முயற்சி செய்யலாம். எதிரணிக்கு 300 ரன்கள் கூட வெற்றி இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் அது சரியாக அமையவில்லை எனில் சிறிது பொறுமையாக காத்திருந்து விளையாட வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார்.

Published by