இது 2022 இல்லனு இந்தியா காட்டிட்டாங்க.. அவங்க அந்தவொரு விஷயத்துல கில்லாடிங்க – ஜோஸ் பட்லர் பேச்சு

0
6332
Buttler

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. இந்தப் போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணங்கள் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்தார். இந்திய அணி பவர் பிளேவில் விராட் கோலி மற்றும் ரிஷப்மென்ட் விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் விழுந்தது. இதனால் இங்கிலாந்து இந்த முறையும் 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி போல செய்து விடும் என்கின்ற அச்சம் உருவானது.

- Advertisement -

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் 50 பந்துகளில் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ரோஹித் சர்மா 57 மற்றும் சூரியகுமார் யாதவ் 47 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 103 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணியில் அக்சர் படேல் மற்றும் குள்தீப் யாதவ் இருவரும் தலா முக்கிய 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்கள்.

இந்த போட்டியில் தோல்விக்கு பிறகு பேசிய ஜோஸ் பட்லர் “இந்தியா எங்களை எல்லா விதத்திலும் மிஞ்சிவிட்டது நாங்கள் 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக அவர்களுக்கு கொடுத்து விட்டோம். இது ஒரு சவாலான விக்கெட். அவர்கள் நன்றாக விளையாடினார்கள். இந்த வெற்றிக்கு அவர்கள் முழுவதும் தகுதியானவர்கள். 2022 அரையிறுதி போல் இல்லாமல் இது முற்றிலும் வித்தியாசமான கண்டிஷன். இந்தியாவிற்கு கிரெடிட் கொடுக்க வேண்டும் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். மழையால் கண்டிஷனில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க பேட்டர்ஸ் தெளிவா ஒரு விஷயத்தை என்கிட்ட சொன்னாங்க.. இந்த பிட்ச்ல இதைத்தான் செய்தேன் – அக்சர் படேல் பேட்டி

இந்திய அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. மேலும் டாஸ் இரண்டு அணிகளுக்கு இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியதாகவும் நினைக்க வேண்டாம். அவர்களிடம் அருமையான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் ஸ்பின்னர்கள் செயல்பட்ட விதத்திற்கு மொயின் அலியையும் பந்து வீச வைத்திருக்க வேண்டும். எங்களுடைய அனைவரின் முயற்சிக்காகவும் பெருமைப்படுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.