இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் தற்போது அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் இந்திய அணி வீரர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி
இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் சொந்த மண்ணில் மூன்றாவது முறையாக இந்தியாவில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்த நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் ஆன இந்தியா வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை வென்றது. தற்போது இதே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் தற்போது எழுந்து வரும் நிலையில் இந்திய முன்னாள் கேப்டனான கபில் தேவ் நீங்கள் சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களை கூறினால் அதில் ரோஹித் சர்மா நிச்சயம் இருப்பார் எனவும், விராட் கோலி போன்று ரோகித்தும் கொண்டாடப்பட வேண்டிய வீரர்களில் ஒருவர் என்றும் அவரது திறமை குறித்து சந்திக்க வேண்டாம் அவர் மீண்டு வருவது குறித்து அவருக்கு நன்றாக தெரியும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் போல அவர் கொண்டாடப்பட வேண்டும்
இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “விராட் கோலியை போலவே ரோஹித் சர்மா நமது நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். நான்கு டாப் பேட்ஸ்மேன்களை கூறினால் அதில் ரோகித் சர்மா நிச்சயம் இருப்பார். அவர் கடினமான காலத்தில் இருந்தாலும் அவரால் அதிலிருந்து எப்படி மீண்டு வர முடியும் என்று நன்றாகவே அறிந்திருப்பார். ரோகித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:இந்திய ஜாம்பவான்கள் கருத்து வேஸ்ட்.. அதை கேட்டு ரோஹித் செஞ்சா நிலைமை மோசமாகும் – டோட்டா கணேஷ் கருத்து
ஏனென்றால் பல ஆண்டுகளாகவே ரோஹித் சர்மா இதனை செய்து வருகிறார். எனவே யாரையும் சந்தேகக்க வேண்டாம் நான் ரோகித் சர்மாவை சந்தேகப்பட மாட்டேன். அவர் விரைவில் மீண்டும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே இப்போது அதுவே முக்கியம்” என்று கபில் தேவ் கூறியிருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது எனவே அடுத்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரண்டு அணிகளும் மிக ஆக்ரோஷமாக விளையாடும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.