இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சில தினங்களில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மோசமாக விளையாடிய ரோஹித் சர்மா
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் ஆன இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் ரோகித் சர்மா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார்.
பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதில் சொதப்பியது மட்டுமல்லாமல் கேப்டன் பொறுப்பிலும் சொதப்பி இந்தியா தோல்வியடைய முக்கிய காரணமாகவும் அமைந்தார். ஜெய்ஸ்வால் ராகுல் கூட்டணி தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதால் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா ஆறாவது வரிசையில் இறங்கி விளையாட்டினாலும் அவருக்கு அது கை கொடுக்கவில்லை.
துவக்க இடத்தில் இறங்கினால் நிலைமை இதுதான்
மேலும் கடைசி 6 டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா 11.83 சராசரியில் 142 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா திரும்பவும் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் கூற இதனை இந்திய முன்னால் வீரர் டோட்டா கணேஷ் மறுத்து தனது விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க:ஆப்கான் 2 சீரிஸ்.. ஜிம்பாப்வே அணி அறிவிப்பு.. இங்கிலாந்து சாம் கரன் தம்பி அறிமுகம்.. அதிரடி திட்டம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா ஏற்கனவே தன்னம்பிக்கை மற்றும் ரன்களை இழந்து காணப்படுகிறார். கபாவில் தொடக்க இடத்தில் களமிறங்குமாறு வல்லுனர்கள் கூறுவது முட்டாள்தனமாக உள்ளது. அவர் ரன்கள் குவிக்கக்கூடிய சொந்த மண்ணிலேயே சிறப்பாக விளையாடாமல் தடுமாறி வருகிறார். அவர் அடுத்த போட்டியில் தொடக்க வரிசையில் களம் இறங்கினால் கதை கசாப்பு கடைக்கு செல்லக்கூடிய ஆட்டுக்குட்டி ஆகிவிடும்” என்று கூறி இருக்கிறார்.






