இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார். இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் முகமது ஷமி குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
காயத்தில் இருந்து திரும்ப வந்திருக்கும் முகமது ஷமி
முகமது ஷமி கடைசியாக இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அவரால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. இதில் குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரிலும் டி20 உலக கோப்பை தொடரிலும் அவரால் விளையாட முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் ஷமி திரும்பவும் காயத்திலிருந்து குணமாகி உள்ள நிலையில் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி இந்திய உள்நாட்டு தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார். மீண்டும் பழைய வேகத்தில் வருவதற்கு தகுந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஷமி ஐபிஎல் தொடரில் குறைந்த விலைக்கு ஏலம் போவார் என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
கவலைக்குறிய விஷயமாக மாறிவிடும் – சஞ்சய் மஞ்சுரேக்கர்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “முகமது ஷமி காயத்தில் இருந்து குணமாகி திரும்ப வந்திருக்கும் நிலையில் ஐபிஎல் அணிகள் அவரை வாங்க முயற்சிக்கும். ஆனால் அவரது காயத்தின் வரலாறு குறித்து பார்க்கும்போது அது குணமடைய கணிசமான காலம் எடுத்துக் கொண்டது மறுக்க முடியாத உண்மை. ஐபிஎல் சீசனின் போது காயம் குறித்த கவலை நிச்சயமாக இருக்கும். ஒரு ஐபிஎல் அணி அவர் மீது அதிக அளவு முதலீடு செய்து தொடரின் நடுப்பகுதியில் அவரால் விளையாட முடியவில்லை என்றால் அது கவலைக்குரிய விஷயமாக மாறிவிடும்.
இதையும் படிங்க:விமர்சனம் பண்றவங்க பண்ணட்டும்.. நீங்க இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருங்க – கேஎல் ராகுலுக்கு அறிவுரை கூறும் மைக் ஹஸி
இந்தக் கவலை அவரது விலை குறையவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது” என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஷமி கடைசியாக குஜராத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது காயத்தின் தீவிரம் தெரியாததால் குஜராத் அணியும் அவரை தக்க வைக்கவில்லை. எனவே வருகிற ஐபிஎல் சீசனில் எவ்வளவு தொகைக்கு செல்கிறார் எந்த அணி அவரை ஏலத்தில் எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.