விமர்சனம் பண்றவங்க பண்ணட்டும்.. நீங்க இந்த விஷயத்துல மட்டும் கவனமா இருங்க – கேஎல் ராகுலுக்கு அறிவுரை கூறும் மைக் ஹஸி

0
74

இந்திய கிரிக்கெட் அணி இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ளது. வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி இந்திய வீரருக்கு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்

சில வாரங்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட உள்ள இந்திய டெஸ்ட் அணியை அறிவித்தது. அதில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் என சரிசமமான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ஹனுமா விகாரி, புஜாரா போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை. இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் தற்போதைய அணியில் இடம் பெற்று இருந்தாலும் பேட்டிங்கில் சற்று தடுமாறி வருகிறார்.

இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க போராடிவரும் நிலையில் ஆஸ்திரேலியா தொடர் இவருக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினால் இந்திய அணி இனி விளையாடும் அடுத்தடுத்த தொடர்களில் கேஎல் ராகுல் இடம் பெறுவார் என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் போட்டிகளில் மட்டுமே கவனத்தை செலுத்துமாறு ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி அறிவுரை வழங்கியிருக்கிறார்.

- Advertisement -

விமர்சனங்களை கவனத்தில் கொள்ள வேண்டாம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறுகையில் “கேஎல் ராகுல் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். அவர் அவரது திறமையை நம்புவதும், எந்த விஷயத்தை செய்தாலும் நம்பிக்கையோடு செயல்படுவது மட்டுமே மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அவர் எவ்வளவு நல்லவர் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் இந்த வகையான சந்தேகங்களை உங்களது மனதில் வைக்கும் வெளிநபர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:இலங்கை டெஸ்ட்.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. திரும்பிய ஸ்டார் வீரர்.. இந்திய அணிக்கு புதிய சிக்கல்

மேலும் கேஎல் ராகுலும் வெளியில் இருந்து வரும் விஷயங்களை பெரிதாக கவனத்தில் கொள்வதில்லை, அவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன். மேலும் அவர் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறார் எனவும் நம்புகிறேன் ஏனென்றால் கேஎல் ராகுல் சிறந்த வீரர்களில் ஒருவர். இந்த தொடரின் ஆரம்பத்திலேயே அவர் சிறப்பாக விளையாடினால் பின்வரும் போட்டிகளில் அவரால் நம்பிக்கையாக விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -