ரோகித்துக்கு ரிஷப் பண்ட்டை பத்தி தெரியாது.. அவர் அபூர்வமானவர்.. அவர் இப்படிதான் – அஜய் ஜடேஜா கருத்து

0
37
Ajay

இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ரிஷப் பண்ட் ஒரு அபூர்வமான வீரர் எனவும் அதன் காரணமாக அவர் அரிய சாதனைகளை படைப்பார் எனவும் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். நிச்சயமாக அவர் சதத்திற்கான பதட்டத்தில் ஆட்டம் இழக்கவில்லை என்று அஜய் ஜடேஜா உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் ஏற்கனவே சொல்லி இருக்கார்

இது குறித்து பேசி இருக்கும் அஜய் ஜடேஜா கூறும்பொழுது ” ரிஷப் பண்ட் அடித்ததை எல்லோராலும் பாராட்ட முடியும். அணி கடினமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவரிடமிருந்து சிறப்பான விஷயங்கள் வெளியில் வருகின்றன. அவர் 90களில் இருப்பதைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது. அதே சமயத்தில் எங்களுடைய ஷோவுக்கு வந்திருந்த பொழுது இனி சதம் அடிப்பது குறித்து தான் கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருந்தார்”

“நாள் முழுவதும் ரிஷப் பண்ட் உடன் கூடவே இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு அவரைப் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. அவரது மனதில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை.அவர் தற்போது 90 ரன்களில் அதிக முறை ஆட்டம் இழந்து சாதனை படைத்திருக்கிறார். ஏனென்றால் அவர் அபூர்வமானவர் இப்படியான அரிய சாதனைகளை படைப்பார்”

- Advertisement -

நிச்சயம் ரிஷப் பண்ட் பதட்டப்படவில்லை

“அவர் 90களில் ஆட்டம் இழந்த எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது அவர் பதட்டத்தால் ஆட்டம் இழந்தபடி தெரியவில்லை. அவர் எக்ஸ்க்யூஷனில் தவறு செய்திருக்கிறார். அவரிடம் சமநிலை இல்லாமல் இருந்திருக்கிறது. எப்படியும் ஆட்டமிருந்து வெளியேறும் பொழுது ஏதாவது ஒரு தவறு இருக்க செய்கிறது”

இதையும் படிங்க : 2வது டெஸ்டில் சர்பராஸ் கான் வேண்டாம்.. கேஎல்.ராகுல் தொடரனும்.. காரணம் இதுதான் – பார்த்திவ் படேல் பேட்டி

“அதே சமயத்தில் அவர் பதட்டம் அடைந்து ஆட்டம் இழக்கிறாரா? என்பது குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. அதே சமயத்தில் தற்போது 99 ரன்னில் அவர் ஆட்டம் இழந்த இன்னிங்ஸை எடுத்து எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், அவர் பதட்டத்தால் ஆட்டம் இழந்தது போல் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -