2வது டெஸ்டில் சர்பராஸ் கான் வேண்டாம்.. கேஎல்.ராகுல் தொடரனும்.. காரணம் இதுதான் – பார்த்திவ் படேல் பேட்டி

0
168
Sarfaraz

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் தொடர்ந்து இந்திய அணியில் இருக்க வேண்டும் என பார்த்திவ் படேல் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சுமாராக விளையாடு இருந்தார். அதே சமயத்தில் அவருடைய போட்டியாளர் சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்து அணியை முக்கியமான நேரத்தில் காப்பாற்றினார். தற்போது யாருக்கு வாய்ப்பு தருவது? என்பது பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

- Advertisement -

நான் கேஎல்.ராகுல் உடன் தொடர்வேன்

இதுகுறித்து பேசி இருக்கும் பார்த்திவ் படேல் கூறும்பொழுது “சர்ப்ராஸ் கான் உடன் செல்கிறார்களா அல்லது ராகுலுடன் செல்கிறார்களா என்பது தான் தற்போது இருக்கும் பெரிய கேள்வி. நானாக இருந்தால் ராகுலை வைத்துதான் விளையாடுவேன். ஏனென்றால் அணியின் சிந்தனை ராகுலை தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது. எனவே நானும் அப்படி நினைக்கிறேன்”

“அணி நிர்வாகம் நினைத்து இருந்தால் ராகுலை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் விராட் கோலி மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வைத்து ராகுலை தொடர்ந்து அவருடைய ஆறாம் இடத்தில் விளையாட வைத்தார்கள். காரணம் அவருடைய இடத்தை மாற்ற அவர்கள் விரும்பவில்லை. அதே சமயத்தில் சர்ப்ராஸ் கான் ஆட்டத்தில் இருந்து எதையும் நீக்க முடியாது. அவர் அருமையாக விளையாடி இருக்கிறார். தற்போது ராகுல் மற்றும் சிராஜ் மீது சமமாக அழுத்தம் இருக்கிறது”

- Advertisement -

நான்கு பந்துவீச்சாளர்கள் திட்டம் வருமா?

மேலும் பேசிய பார்த்திவ் படேல் கூறும்பொழுது ” தற்போது உள்ள நிலையை எடுத்துக் கொண்டால் முகமது சிராஜை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கினார்கள் என்றால் கேஎல்.ராகுலையும் லெவனிலிருந்து நீக்கி விடுவார்கள். சிராஜ் தொடர்ந்தால் ராகுலும் தொடர்வார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: மகளிர் உலக கோப்பை 2024: பரிசுத்தொகை மற்றும் விருதுகள்.. நியூஸி மற்றும் இந்திய அணிகள் பெறுவது எவ்வளவு.?.. முழு விபரம்

“இதில் இன்னொரு விருப்பமும் இருக்கிறது. சுப்மன் கில் வரும் பொழுது ஐந்து பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக நான்கு பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு, எந்த பேட்ஸ்மேனையும் நீக்காமல் அப்படியே தொடர முடியும். இப்படி நடக்கும் பட்சத்தில் கில் அவருடைய மூன்றாவது இடத்திற்கு வர விராட் கோலி நான்காவது இடத்திற்கு செல்வார். கேஎல்.ராகுல் அவருடைய இடத்தில் தப்பிப்பார். ஆனால் இது நடப்பது கடினம்தான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -