இந்திய கிரிக்கெட்

சூரியவன்சி இதை பண்ணும்போது வேற லெவலுக்கு போய் இருப்பார்.. என் மனைவி கூட பையனுக்கு ஃபேன்தான் – ஸ்ரீகாந்த் பேச்சு

​துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி காட்டிய அதிரடி ஆட்டம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

- Advertisement -

​மத்திய மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலாவுது இன்னிங்ஸில் தொண்ணூற்றிரண்டு ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் நாற்பது ரன்களும் குவித்து கிழக்கு மண்டல அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

​பதினைந்து வயதே ஆன இவரது அதிரடி பேட்டிங் ஸ்டைல் மற்றும் ஷாட்கள் அடிக்கும் விதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மீதான ஆர்வத்தை மீண்டும் ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது.

​இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர உற்சாகத்தைக் குறைக்கக் கூடாது. அவரை சரியாக வழிநடத்தினால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக உருவெடுப்பார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பழைய பெருமையைக் கொண்டு வருவார். அவரது ஆட்டத்தைப் பார்க்கவே அனைவரும் துலீப் டிராபியைப் பார்த்தார்கள். எனது வொய்ஃப் கூட அவர் விளையாடுவதைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.” என்று தொடங்கி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “எதிர்காலத்தில் உலக கிரிக்கெட்டிற்கு அவர் ஒரு மிகப்பெரிய அஸெட்டாக இருப்பார். மிக விரைவில் அனைத்து ஃபார்மட்களிலும் அவர் உலக கிரிக்கெட்டை ஆளப் போகிறார். ரெட் பால் கிரிக்கெட்டில் எந்தப் பயமும் இன்றி ஃபாஸ்ட் பௌலர்களை ஸ்ட்ரெயிட் சிக்ஸர் அடிக்கிறார். பௌலர்களுடன் அவர் ஜாலியாக விளையாடுகிறார். ஒரே சீசனில் ஐந்து முறை தொண்ணூறுகளில் அவுட்டாகி சதத்தைத் தவறவிட்டுள்ளார். தனது ஆட்டத்தை மேலும் நிலைநிறுத்தி நிரூபிக்கும் போது அவர் வேறு லெவலுக்குச் செல்வார்.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts