இந்தியாவை பாகிஸ்தான் அணியால் மிஞ்ச முடியாது.. அவர்கள் நினைக்கும் அது அவமானம் – இங்கி ரவி போபரா பேச்சு

0
195
Ravi

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ரவி போபரா தற்போதைய பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை எப்பொழுதுமே வெல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.

மேலும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெல்ல முடியும் என்று நம்புவதாகவும், ஆனால் பாகிஸ்தான் அணி யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடினால் அதை வைத்து இந்திய அணியை வென்று விடலாம் என்றும் நினைப்பதாகவும், இது அவமானகரமானது என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

அடக்கம் செய்ய நினைப்பார்கள்

தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இந்தியா பாகிஸ்தான் அணிகளின் வலிமை குறித்தும், இரண்டு அணிகளின் போட்டிக்கு முன்பான மனநிலை குறித்தும் மிகவும் விரிவான முறையில் பதில் அளித்து இருக்கிறார். மேலும் வெளிப்படையாகவும் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து ரவி போபரா பேசும் பொழுது ” இந்தியா பாகிஸ்தான் அணியை ஒரு அச்சுறுத்தலாக பார்ப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி ஆஸ்திரேலிய இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை இவ்வாறு பார்க்கலாம். இந்த வரிசையில் பாகிஸ்தான் கடைசி இடத்தில்தான் இருக்கும். ஆனால் இந்திய அணி ஒரு குழுவாக பாகிஸ்தான் அணி போட்டியை பற்றி பேசும்பொழுது ‘ நண்பர்களே நாம் இந்த போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அவர்களை அடக்கம் செய்வோம்’ என்றுதான் பேசுவார்கள்”

- Advertisement -

இது அவமானம்

“பாகிஸ்தான் அணியால் இந்தியாவை மிஞ்ச முடியாது அவர்களும் தங்களால் மிஞ்ச முடியும் என்று நினைப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து ஓய்வறையில் பேசும் பொழுது ‘நண்பர்களே இன்று நம்மில் யாருடைய நாளாக அமைந்தால், நாம் இந்திய அணியை வென்று விடலாம்’ என்றுதான் பேசுவார்கள்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் வீரர்கள் செஞ்ச அத கேமரா முன்னால சொல்ல முடியாது.. என்னோட குறிக்கோள் ஒன்னுதான் – திலக் வர்மா பேட்டி

“அவர்கள் பகார் ஜமான் அந்த ஒரு நாளில் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு அவமானமான விஷயம். பாகிஸ்தானில் நிறைய பேர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால் அவர்களால் இந்திய அணிக்கு எதிராக எல்லையை தாண்டி வெற்றி பெற முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -