இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி தகுதி பெற்றது பல விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. இதில் உள்ள போட்டி அட்டவணை குறைபாட்டை புதிய ஐசிசி தலைவர் ஜெய் ஷா சரி செய்ய வேண்டுமென இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கேட்டிருக்கிறார்.
மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி தகுதி பெற்று இருக்கிறது. இந்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாட இருக்கிறது.
நடப்பு மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 11 போட்டி விளையாடியதின் முடிவிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றும் விட்டது.
இதில் மிக முக்கியமாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. இந்தியா உடனும் சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தென் ஆப்பிரிக்காவின் இரண்டு ஆண்டு டெஸ்ட் போட்டி அட்டவணை மிகவும் சிறியதாக இருப்பதோடு, மேலும் பெரிய அணிகளுக்கு எதிராகவும் போட்டிகள் இல்லாதது விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது.
தற்போது அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரி அளவிலான போட்டிகளை அனைத்து அணிகளுடனும் கொடுக்க வேண்டும். அல்லது ஒரு அணி அதிக போட்டிகளில் விளையாடும் பொழுது அதற்கு கொடுக்கப்படும் வெற்றி சதவீதத்தை கூடுதலாக மாற்ற வேண்டும். இப்படி ஏதாவது மாற்றங்கள் வந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நியூசிலாந்து இலங்கை 3வது டி20.. இந்தியாவில் எந்த சேனலில் பார்ப்பது.?. தொடங்கும் நேரம்.. முழு விவரம்
இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது ” தென் ஆப்பிரிக்க அணி அவர்கள் இறுதிப் போட்டிக்கு வருவதற்காக அவர்கள் தங்களுடைய அட்டவணையை உருவாக்கவில்லை. அவர்களுடைய அட்டவணையை உருவாக்கியது ஐசிசி. எனவே நாம் தென் ஆப்பிரிக்க அணியை விமர்சனம் செய்ய முடியாது. உங்களால் சமாளிக்க முடிந்த அட்டவணையில் நீங்கள் விளையாடுகிறீர்கள். தற்போது இதற்கு தகுதிக்கான செயல்முறைதான் பிரச்சனையாக இருக்கிறது. இதை ஜெய் ஷா உறுதியாக சரி செய்வார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.