தற்போது இலங்கை அணி இரண்டு வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரில் மூன்றாவது தொட்டி போட்டி எந்த நேரத்தில் தொடங்கும் இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்? என்று தெரிந்து கொள்ளலாம்.
நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. நியூசிலாந்து வெள்ளைப் பந்து அணிகளுக்கு புதிய கேப்டனாக மிட்சல் சான்ட்னர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிலடிக்காக காத்திருந்த நியூசிலாந்து
இந்த வருடத்தின் மத்தியில் நியூசிலாந்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு இலங்கை வந்தது. அதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைய, மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் பெரிதாக நியூசிலாந்து அணியால் சாதிக்க முடியவில்லை.
இதற்காக இலங்கை அணியை சொந்த மண்ணில் சந்திப்பதற்காக நியூசிலாந்து அணி காத்திருந்தது. இந்த நிலையில் முதலில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் நியூசிலாந்து அதிரடியாக வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு துவங்க இருக்கிறது.
இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்?
இந்தப் போட்டி சக்ஸ்டன் ஓவல் நெல்சன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த போட்டியை இந்தியாவில் தொலைக்காட்சியில் பார்ப்பதாக இருந்தால் சோனி நெட்வொர்க்கில் பார்க்கலாம். மேலும் ஆன்லைனில் பார்ப்பதாக இருந்தால் ஃபேன்கோடு அப்ளிகேஷனில் பார்க்கலாம். தற்போது இந்த இரண்டு வகைகளிலும் பார்க்க இந்த போட்டி இந்தியாவில் கிடைக்கிறது.
இதையும் படிங்க : நித்திஷ் ரெட்டி மாதிரி.. இங்கிலாந்து டெஸ்ட்ல அந்த 30 வயது வீரர் தேவை.. அவருக்கு குறி வைங்க – கவாஸ்கர் பேட்டி
நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில் வென்று தொடரில் இலங்கை அணியை ஒயிட் வாஸ் செய்ய நியூசிலாந்து விரும்புகிறது. மேற்கொண்டு அதற்கடுத்து நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் இதையே செய்ய அந்த அணி காத்திருக்கிறது. நியூசிலாந்து அணியின் இந்த காத்திருப்புக்கு இலங்கை அணி என்ன செய்யும்? என்பது இந்த தொடரில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.






