இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 அவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சூரிய வஞ்சி 49 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு பேட்டிங் செய்த ஜிம்பாவே இந்திய அணியின் மௌலிகை சமாளிக்க முடியாமல் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய கேப்டன் பேசும் போது ” இந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது ஒரு கேப்டனாக இந்த தொடர் வெற்றி என்பது எனக்கு சிறப்பாக உள்ளது. மேலும் இந்த தொடரில் இருந்து கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்று பார்த்தால் நமது வீரர்கள் அனைவரும் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். ஒரு கேப்டனாகவும் ஒரு அணியாகவும் எனக்கு தேவைப்படுவது இந்த விஷயம் தான். மேலும் நம் வீரர்கள் அனைவருடனும் ஏறத்தாழ சரிசமமான போட்டிகளில் விளையாடியுள்ளேன். மேலும் அவர்களை ஐபிஎல் தொடரிலும் விளையாடியிருக்கிறார்கள். எனவே நான் ஒவ்வொரு முறையும் விளையாடும்போது அவர்கள் வசதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்வேன்” என்று பேசி இருக்கிறார்.