கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஆசிய விளையாட்டு 2026: கிரிக்கெட் அட்டவணை வெளியீடு… இந்தியா–பாகிஸ்தான் போட்டி நடக்குமா? முழு விவரம்

ஆசிய விளையாட்டு 2026 கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எப்போது மோதும் என்ற கேள்வி ரசிகர்களிடையே மீண்டும் எழுந்துள்ளது. ஆனால் இந்த இரு அணிகளும் தொடக்க சுற்றிலோ, காலிறுதியிலோ சந்திக்க முடியாத வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த முறை ஆசிய விளையாட்டு ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெறுகிறது. பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்க, ஆண்கள் பிரிவு செப்டம்பர் 24-ஆம் தேதி ஆரம்பமாகிறது. அனைத்து போட்டிகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், வீரர்களின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களிலும் இப்போட்டிகள் சேர்க்கப்படும்.

இந்தியா–பாகிஸ்தான் போட்டி நடக்க ஒரே வழி

ஆண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தரவரிசை அடிப்படையில் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. மற்ற அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி காலிறுதிக்கு வர வேண்டும். போட்டி அட்டவணைப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் எதிரெதிர் பாதையில் இடம்பெற்றுள்ளதால், இந்த இரு அணிகளும் அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உள்ளது.

பெண்கள் பிரிவில் இந்திய அணி காலிறுதியில் ஜப்பானை சந்திக்கிறது. அந்தப் போட்டியில் வென்றால், அரையிறுதியில் வங்கதேசம் அல்லது சீனாவை எதிர்கொள்ளும். மறுபுறம், பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் தாய்லாந்தை எதிர்கொள்கிறது; அந்தப் போட்டியில் வென்றால் மற்றொரு அரையிறுதிக்கு முன்னேறும்.

- Advertisement -

2023 ஆசிய விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருந்தது. இந்த முறையும் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணி, மீண்டும் தங்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் விளையாட உள்ளது. இந்தியா–பாகிஸ்தான் மோதலை எதிர்பார்க்கும் ரசிகர்கள், இரு அணிகளும் அரையிறுதி அல்லது இறுதிப்போட்டிக்கு முன்னேறுகிறார்களா என்பதை ஆவலுடன் கவனிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts