இங்கிலாந்து கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களில் இயான் போத்தமுக்கு அடுத்து ஆண்ட்ரூ பிளின்ட்டாப் மிக முக்கியமானவர். இவர் தனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக மோசமான கார் விபத்து குறித்து பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்காக ஆண்ட்ரூ பிளின்ட்டாப் 1998 ஆம் வருடம் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமானார். இதற்கு அடுத்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆசஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிக முக்கியமான வீரராக இருந்தார். யாரும் எதிர்பாராத விதமாக தன்னுடைய 35 வது வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
இந்த நிலையில் பாக்ஸராக இன்னொரு துறையில் கவனம் செலுத்தினார். இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு டாப் கியர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் காரை செலுத்துவதற்கான ஒரு நிகழ்வில் கடுமையான விபத்தில் சிக்கினார். இதில் இவரது முகத்தில் பெரிய காயங்கள் மற்றும் எலும்புகள் உடைந்தன. தற்போது அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ஆண்ட்ரூ ப்ளின்ட்டாப் பேசும்பொழுது “நடந்த சம்பவத்திற்கு பிறகு நான் உண்மையாகவே இங்கு இருக்க முடியாது. ஆனால் எனக்காக வருத்தப்பட்டு நான் அப்படியே உட்கார்ந்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு ஒருபோதும் அனுதாபம் தேவையில்லை. நான் என்னுடைய கவலைகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அந்த விபத்து குறித்து கனவுகள் வருகின்றன. அந்த ஃப்ளாஷ் பேக் தொடர்கிறது. இதை சமாளிப்பது மிகவும் கடினம்.
ஆனால் இதற்கு ஏதாவது செய்யவில்லை என்றால் என்னால் மீண்டும் வர முடியாது. நான் ஏற்கனவே நிறைய போராடிக் கொண்டிருக்கிறேன். நான் சிறந்த ஒருவனாக இல்லை. எனக்கு உண்மையில் உதவி தேவைப்படுகிறது. ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு முறையும் நான் அழுகையை கட்டுப்படுத்தி நிறுத்த வேண்டி இருக்கிறது.
இதையும் படிங்க : 86 பந்து.. பறந்த 10 சிக்ஸ்.. திருநெல்வேலியில் மிரள விட்ட இசான் கிஷான்.. மாஸ் கம்பேக்
நான் தற்போது என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் பாசிட்டிவான விஷயங்களை பார்க்க வேண்டும். நான் அதிலிருந்து ஏதாவது எடுத்துக்கொண்டு இந்த விஷயங்களில் இருந்து நான் மீண்டு வர வேண்டும். நான் அந்த விஷயம் குறித்து எப்போதெல்லாம் பேசுகிறனோ அப்போதெல்லாம் மிகுந்த உணர்ச்சி வசப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.