தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பல ஆண்டுகளாக நடத்தி வரும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவிலான புச்சி பாபு தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் ஒரு போட்டியில் மத்திய பிரதேஷ் மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் மோதி கொண்ட போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இஷான் கிஷான் அதிரடி சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்தது. இதற்கு முன்பிருந்தே இந்திய அணியில் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து இஷான் கிஷான் பயணம் செய்து வந்தார். ஆனாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே கொடுக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக அணியோடு இருப்பதும், அப்படி இருந்த பொழுதும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததும், தனக்கு அதிகப்படியான மனச்சோர்வை அளிப்பதாக கூறி அணியை விட்டு வெளியேறினார். பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் கால் இறுதியில் தனது மாநில அணிக்காக ஜார்கண்ட் அணிக்கு விளையாடவில்லை. இதன் காரணமாக ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கி பிசிசிஐ சம்பளப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பி மீண்டும் விளையாட நிசான் கிஷான் முடிவு செய்து புச்சி பாபு தொடருக்கு ஜார்க்கண்ட் அணிக்காக வந்தவுடன், அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் திருநெல்வேலியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 84 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இஷான் கிஷான் இருந்தார். இந்த நிலையில் இருந்து சதத்தைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி தனது உள்நாட்டு ஏழாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இன்றைய போட்டியில் வெறும் 86 பந்துகளை மட்டுமே சந்தித்து அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் இஷான் கிஷான் அதிரடியாகச் சதம் அடித்தார். மேலும் ஒட்டுமொத்தமாக 17 பந்துகள் சந்தித்து 114 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமாக மட்டுமே அவர் மொத்தம் 80 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய அணி இல்லை.. என்னோட கம் பேக் நிச்சயம் இந்த அணிக்காகத்தான் – முகமது ஷமி அறிவிப்பு
மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்தவுடன் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, தற்பொழுது தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தையும் மாற்றாமல் சதம் அடித்திருப்பது மூலமாக, அடுத்தடுத்து இந்திய அணி விளையாடும் தொடர்களுக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக தானும் இருப்பதை தேர்வுக்குழுவுக்கு அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார்.






