இந்திய கிரிக்கெட்

கம்பீர் பண்றது புவனேஸ்வர் குமாருக்கு அநியாயம்.. அந்த பையனுக்கு எதுக்கு வாய்ப்பு? – ஸ்ரீகாந்த் கோபம்

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, இந்திய அணியில் இளம் பவுலர் யாஷ் தாக்கூருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் கேப்டன் கே ஸ்ரீகாந்த் தனது காட்டமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​இந்திய கிரிக்கெட் அணி ஆஃப்கானிஸ்தான் உடனான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. டெல்லியில் நடந்த கடைசிப் போட்டியில் ஆர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக யாஷ் தாக்குர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டு 2 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

​இருப்பினும், போதுமான ஐபிஎல் அனுபவமும் உள்நாட்டுப் போட்டிகளில் பெரிய சாதனைகளும் இல்லாத ஒரு இளம் வீரருக்கு இவ்வளவு சுலபமாக இந்திய அணியின் கேப் வழங்கப்படுவது நியாயமற்றது என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

​இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் ஸ்ரீகாந்த் பேசும்போது “யாஷ் தாக்குர் போன்ற ஒருவர் எப்படி இந்திய அணியின் கேப்பை அணிய முடியும். அவருக்கு கேப் கொடுப்பது என்பது, யாருக்கு வேண்டுமானாலும் இந்திய அணிக்கான தொப்பியை சுலபமாக வழங்கிவிடலாம் என்ற தவறான மெசேஜை தருகிறது. இந்திய அணிக்காக விளையாடத் தகுதி, திறமை மற்றும் வலுவான டொமஸ்டிக் பெர்ஃபார்மன்ஸ் தேவை” என்று கடுமையாகக் கூறியுள்ளார்.

- Advertisement -

​மேலும் அவர் பேசும்போது “யாஷ் தாக்கூர் இந்திய அணிக்காக விளையாடுவது புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் பிளேயர்களுக்கு செய்யப்படும் அநீதி. யாஷ் தாக்குர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் அவர்களின் ஐபிஎல் டீம்களில் கூட ரெகுலர் பிளேயர்களாக ஆடாதவர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts