இந்திய கிரிக்கெட்

பிசிசிஐ அகர்கருக்கு வைத்த ஆப்பு.. பின்னணியில் ரோகித் சர்மா விவகாரம் – வெளியான செய்திகள்

மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ அமைப்பின் 95வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்க்காரின் பதவி நீடிப்பு மற்றும் தேர்வுக்குழுவின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பிசிசிஐ நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

​அஜித் அகர்க்கார் ஜூலை 2023-இல் தேர்வுக்குழுத் தலைவராகப் பொறுப்பேற்ற நிலையில், அவரது தற்போதைய காண்ட்ராக்ட் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், அகர்க்காருக்கு மேலும் பதவி நீடிப்பு வழங்கி தொடர்வதா அல்லது புதிய தேர்வுக்குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அப்ளிகேஷன் நடைமுறைகளைத் தொடங்குவதா என்பது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் விரைவில் கூடி முக்கிய முடிவை எடுக்க உள்ளனர்.

​பொதுக்கூட்டம் முடிந்த பிறகு பிசிசிஐ வைஸ் ப்ரெசிடென்ட் ராஜீவ் சுக்லா இதுகுறித்து பேசும்போது “ஐபிஎல் கவர்னிங் கவுன்சில் போஸ்ட்களில் அருண் சிங் துமால் மற்றும் மஜும்தார் ஆகியோர் தொடர்கிறார்கள்; மேலும் தேர்வாளர்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ஆபீஸ் பேரர்ஸுக்கு ஏஜிஎம் வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

​கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து மேலும் அவர் பேசும்போது “புதிய தேர்வாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் பிசிசிஐ முதலில் விளம்பரம் வெளியிட்டு, வரப்பெறும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து இன்டர்வியூ நடத்த வேண்டும். எனவே ஆபீஸ் பேரர்ஸ் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்” என்று கூறி இருக்கிறார்.

மேலும் அகர்கர், ரோகித் சர்மாவை தொடர்ந்து ஓரம் கட்டியது அவரை பதவியில் இருந்து சீக்கிரத்தில் வெளியே அனுப்ப முக்கிய காரணமாகவும் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -
- Advertisement -
Published by

Recent Posts