இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்நாட்டு தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் 2024 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் 59 வது லீக் போட்டியில் சோமர்செட் மற்றும் சர்ரே அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் சோமர் செட் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனின் மகன் ஆர்ச்சி வாகன் தனது சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெஸ்ட் வடிவத்தொடராக நடைபெற்று வரும் இந்த தொடரின் 59வது போட்டியில் சோமர்செட் மற்றும் சர்ரே அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த சோமர் செட் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 95 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்கள் குவித்தது. இதில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனின் மகன் தொடக்க வீரராக களம் இறங்கி 107 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் களம் இறங்கிய சர்ரே அணி 112.2 ஓவர்களில் 321 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் டாம் கரண் 86 ரன்களும், ரியான் பட்டேல் 70 ரன்கள், ஜேட்ஸ் 50 ரன்கள் குவித்தனர். இதில் ஆல் ரவுண்டராக ஜொலித்து பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆர்ச்சி வாகன் சர்ரே அணியின் தொடக்க இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்குப் பிறகு 50 ரன்கள் குவித்த ஜேட்ஸ் விக்கடையும், 37 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த ஃபோக்ஸ் விக்கட்டையும் வீழ்த்தினார்.
அதற்குப் பிறகு இறுதிக்கட்ட பேட்ஸ்மேன்கள் கிளர்க் மற்றும் ஸ்டீல் ஆகியோரின் விக்கட்டையும் வீழ்த்த மொத்தமாக வாகன் 37 ஓ
வர்களில் ஏழு ஓவர்கள் மெய்டனுடன் 107 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு முக்கிய விக்கட்டுகளை வீழ்த்தினார். இதுரே சர்வே அணி மேற்கொண்டு ரன்கள் குவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தனது இரண்டாவது முதல் தரப் போட்டியில் விளையாடும் வாகன் முதன்முறையாக 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ச்சி வாகன் ஆகஸ்ட் மாதம் டர்ஹாமுக்கு எதிராக தனது முதல் தர அறிமுக போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் வாகன் 30 ரன்கள் எடுத்தார் என்பதும் கவனிக்கக்கூடிய ஒரு விஷயமாகும். மேலும் வாகன் ஜூன் 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு எதிராக யங் லயன்ஸ் இன்விடேஷனல் லெவன் அணிக்காக விளையாடி இருக்கிறார்.
இதையும் படிங்க:ஸ்டோக்ஸ் இல்லை.. இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் வெள்ளை பந்தில் தலைசிறந்த வீரர் இவர்தான் – மெக்கல்லம் உறுதி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தக் கூடிய வீரராக வாகன் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சர்வதேச அணிக்கு புதிய ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.