இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியோடு டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு புதிய வெள்ளை பந்து பயிற்சிகளாக நியமிக்கப்பட்டுள்ள நியூசிலாந்தைச் சேர்ந்த பிரண்டன் மெக்கெல்லம் இங்கிலாந்து அணியின் சிறந்த வெள்ளை பந்து வீரரை தேர்ந்தெடுத்து பாராட்டியிருக்கிறார்.
சமீபத்தில் இலங்கை அணியோடு டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி நம்பிக்கையோடு அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்க உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் அரை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதற்குப் பிறகு இங்கிலாந்து அணி பங்கேற்கும் முதல் டி20 தொடர் இதுவாகும்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர் கடைசியாக டி20 உலக கோப்பையில் விளையாடியதோடு காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கு பெறவில்லை. அவருக்கு பதிலாக மற்றொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் இங்கிலாந்து அணியை வழிநடத்த உள்ளார். இந்த சூழ்நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மெக்கல்லம் ஜாஸ் பாட்லரை இங்கிலாந்து உருவாக்கிய சிறந்த வெள்ளை பந்து வீரர் என்று பாராட்டி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “ஜாஸ் பட்லர் நம்ப முடியாத கிரிக்கெட் கேரியரை பெற்றுள்ளார் என்று நினைக்கிறேன்.அவர் நாளை தனது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றால் இங்கிலாந்தில் எப்போதும் இல்லாத மிகச்சிறந்த வெள்ளை பந்து வீரராக கருதப்படுவார். இனி அவரிடம் நிரூபிக்கப்படுவதற்கு எதுவுமே இல்லை” என்று பாராட்டிப் பேசியிருக்கிறார்.
சமீபத்திய டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி இழந்த போதிலும் அதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் கலந்துகொள்ளாவிட்டாலும் ஒரு நாள் தொடருக்கு பட்லர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பங்களாதேஷ் தொடரில் வெறும் 52 ரன்.. விராட் கோலி முதல் வீரராக மெகா சாதனை .. ஸ்பெஷல் லிஸ்டில் சேர்ப்பு
மேலும் இங்கிலாந்து அணியில் இருந்து டேவிட் மலான் மற்றும் மொயின் அலி ஆகிய முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளதை தொடர்ந்து திறமையான இளம் வீரர்களை புகுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து சமீபத்திய தொடர்களில் சிறப்பாக செயல்படாத பேர்ஸ்ட்டோவை நீக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.