கில் இந்த மாதிரி செஞ்சு இதுக்கு முன்ன பார்த்தது இல்ல.. ஆனா இனி பெருசா நடக்கும் – அஸ்வின் நம்பிக்கை

0
72
Gill

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரன்கள் எடுத்தது இந்திய துணை கேப்டன் சுப்மன் கில்லுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கும் என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் கில் முதல் மூன்று போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. ஓமான் அணிக்கு எதிராக மிக மோசமான முறையில் ஆட்டம் இழந்தது கவலை அளிப்பதாக அமைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் ரன்கள் எடுக்க வில்லை.

- Advertisement -

நேற்றைய வித்தியாசம்

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஒரு முனையில் அபிஷேக் ஷர்மா முதல் பந்தில் இருந்தே மிகவும் ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்து இருந்தார். அதேசமயத்தில் கில் அவருக்கு ஒத்துழைப்பு தர நினைக்காமல் அவரும் அதிரடியாகவே விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

மேலும் நேற்றைய போட்டியில் கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடி ஆச்சரியப்படுத்தினார். இதற்கு முன்பாக அவர் இப்படியான ரிஸ்க் எடுக்கக்கூடிய ஷாட் விளையாட மாட்டார். இந்திய டி20 அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைப்பதற்கு அவர் சிறந்த முறையில் உருவாகி வருகிறார்.

- Advertisement -

இதற்கு முன்பு பார்த்ததில்லை

இதுகுறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் “கில் ஒரு பாதுகாப்பான இன்னிங்ஸை விளையாடினார். அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் இந்த இன்னிங்ஸ் அவருடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இந்த ஆசியக் கோப்பையில் அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இனி அவர் தன்னை அதிகமாக வெளிப்படுத்த தொடங்குவார். அவர் நேற்று ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடினார். இதற்கு முன்பு அவர் இப்படி செய்து நான் பார்த்ததில்லை”

இதையும் படிங்க : வேணும்னு இந்த கொண்டாட்டத்தை பண்ணல.. இந்தியா கூட அடிச்சது சந்தோசம் எல்லாம் இல்ல – பர்ஹான் பேட்டி

“சிவம் துபே தனக்கு இருந்த சாதகத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். பும்ராவுக்கு இது மாதிரியான நாட்கள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் என்னுடைய பார்வையில் இந்திய அணியின் பவுலிங் செயல்பாடு நல்ல முறையிலேதான் இருந்தது. இது தொடரவும் செய்யும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -