இந்திய கிரிக்கெட்

விராட்டுக்கு அந்த செம 2 விஷயம் தெரியும்.. உங்களால அவரை எதுவும் செய்ய முடியாது – மைக்கேல் கிளார்க் பாராட்டு

ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிதான் தலைசிறந்த பேட்ஸ்மேன் எனவும், அவருக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் மிகத் தெளிவாகத் தெரிவதால் சாம்பியன் வீரராக இருக்கிறார் எனவும் ஆச்சரியம் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் செமி பைனல் போட்டியில் இந்திய அணி சிக்கலில் இருந்த பொழுது சூழ்நிலையை புரிந்து கொண்டு மிகவும் அற்புதமாக விளையாடிய விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் விராட் கோலி

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக செமி பைனல் போட்டியும் இந்திய அணிக்கு மிக முக்கிய போட்டிகளாக இருந்தது. இந்த இரண்டு மிக முக்கிய போட்டிகளிலும் விராட் கோலிதான் ஆட்டநாயகன் விருது வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி பேட்டிங் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உட்பட்டது. இதற்கு அடுத்து இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு அரைசதம் அடித்த திரும்பி வந்த விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டு அதி முக்கிய போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி வழக்கம்போல் தான் அழுத்தத்தில் எவ்வளவு சிறப்பாக செயல்படுவேன் என்றும், மேலும் ரன் துரத்தலின் போது எவ்வளவு சிறப்பாக இருப்பேன் என்றும் காட்டி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் திறமைகள்

இது குறித்து பேசி இருக்கும் மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “மீண்டும் விராட் கோலி ஒருமுறை கண்டிஷனை மிக அற்புதமாக மதிப்பிட்டார். தனது இன்னைக்கு என்ன தேவை என்பதையும், ஆட்டத்தில் வெற்றி பெற எப்படி நிலை நிறுத்துவது என்பதையும் அவர் மிகவும் சிறப்பாக புரிந்து இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சதம் அடித்த பொழுதும் நாம் இதையேதான் அவரிடம் இருந்து பார்த்தோம்”

இதையும் படிங்க : ஆஸி கேப்டன் ஸ்மித் திடீர் ஓய்வு அறிவிப்பு.. பின்னணி காரணம்.. இடையில் என்ன நடந்தது?

“விராட் தன்னுடைய கிரிக்கெட் புத்தகத்தில் ஒவ்வொரு ஷாட்டையும் வைத்திருக்கிறார். பவுண்டரி அடிக்கும் அவரது திறமையை யாரும் குறைத்து மதிப்பிடவோ சந்தேகப்படவோ முடியாது. அவர் எல்லா காலத்திலும் மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன். அதிக அழுத்தத்தின் கீழ் மிகப்பெரிய மேடைகளில் தொடர்ந்து இதை நிரூபித்து வருகிறார். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். முக்கியமான நேரத்தில் அதை அவர் கொடுப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts