ஆஸி கேப்டன் ஸ்மித் திடீர் ஓய்வு அறிவிப்பு.. பின்னணி காரணம்.. இடையில் என்ன நடந்தது?

0
699
Smith

தற்போது சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆஸ்திரேலியா அணியின் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்று இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்திருக்கிறார்.

நேற்று ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஸ்மித் சாதனைகள்

தற்போது ஸ்மித்துக்கு 35 வயது ஆகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருந்தது. ஆஸ்திரேலியா அணி நிர்வாகமும் நிச்சயம் அவரை விளையாட வைக்கும். இப்படியான நிலையில்தான் அவர் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

இரண்டு முறை அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் இந்த வடிவத்தில் 5800 ரன்கள் 12 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடித்து இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்று இருந்தார். மேலும் இந்திய அணிக்கு எதிராக அடுத்தடுத்து 61 பந்துகளில் இரண்டு சதங்கள் இந்த வடிவத்தில் அதிரடியாக எடுத்திருக்கிறார். இவரது ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்திற்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஓய்வுக்கு பின்னணியில் என்ன காரணம்?

தற்போது ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அவர் தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு இளைய வீரர்கள் தயாராவதற்கு வழி விட்டு விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : எதுக்கு அந்த பிளேயர் டீம்ல இருக்கணும்?.. ரோகித் கேப்டன்சி தப்பாதான் இருந்தது – ஹர்பஜன் சிங் விமர்சனம்

அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட் வடிவம் ரசிகர்களிடம் வரவேற்பை இழந்து வருவதாலும், அதிக பணிச்சுமையை கொண்டிருப்பதாலும், மேலும் போட்டி அட்டவணைகள் நெருக்கமாக அமைவதால், அதிக காயமடையும் வாய்ப்புகள் மேலும் உலகெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாட முடியாமல் போவது இவற்றின் காரணமாகவே ஸ்மித் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -