இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாகிஸ்தான் அணியின் திட்டம் குறித்து சில முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மூலமாக ஓரளவு நன்றாக தொடங்கிய நிலையில் அவர் வெளியேறிய பிறகு பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிகமான டாட் பந்துகளை விளையாடினார்கள். கிட்டத்தட்ட 40 முதல் 50 ரன்கள் அதிகமாக வந்திருக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் 241 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதற்குப் பிறகு இந்திய அணி விளையாடி விராட் கோலியின் அபாரமான சதத்தின் மூலமாக 42.3 ஓவர்களில் 244 ரன்கள் குறித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாகிஸ்தான் அணியின் திட்டம் என்ன என்பது முற்றிலுமாக புரியவில்லை என சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
மோசமான திட்டமாகும்
இது குறித்து மைக்கல் கிளார்க் விரிவாக கூறும்போது ” மோசமான திட்டம் இருப்பது பரவாயில்லை, ஆனால் திட்டமே இல்லாமல் இருப்பது தான் மோசமான திட்டம் ஆகும். பாகிஸ்தான் அணிக்கு அவர்களின் திட்டம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. தேர்வு தொடர்பான அவர்களின் திட்டம் என்ன என்று தெரியவில்லை. இன்னிங்ஸ் தொடக்கத்தில் பாகிஸ்தான் வீரர்கள் எப்படி விளையாடச் சென்றார்கள் என்பது குறித்து தெரியவில்லை. சுழற் பந்துவீச்சுக்கு எதிராக அவர்களின் திட்டம் என்ன என்று தெரியவில்லை.
இதையும் படிங்க:தம்பி இந்த செலிப்ரேஷன டிவில கூட பாக்க முடியல.. தேவை இல்லாம பண்ணி சிக்கிக்கிட்டீங்க – வாசிம் அக்ரம் கருத்து
இந்திய அணி சுழற் பந்துவீச்சில் சிறப்பானது என்று தெரியும். இந்திய அணியை வீழ்த்த அவர்களின் திட்டம் என்ன என்று தெரியவில்லை. எந்த ஒரு திட்டமும் இல்லாமல் போட்டியின் மிகப்பெரிய ஆட்டத்திற்கு நீங்கள் திரும்ப முடியாது. எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இது இரண்டு அணிகளுக்கும் ஒரு இறுதிப் போட்டியை போல இருந்தது என்று பேசி இருக்கிறார். ஏற்கனவே பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது இந்திய அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்திருப்பது அடுத்த சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறுவதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக அடுத்த சுற்று வலுவாக முன்னேறி உள்ளது






