தம்பி இந்த செலிப்ரேஷன டிவில கூட பாக்க முடியல.. தேவை இல்லாம பண்ணி சிக்கிக்கிட்டீங்க – வாசிம் அக்ரம் கருத்து

0
902
Akram

நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது கில் விக்கெட்டை கைப்பற்றி அப்ரார் அகமது கொண்டாடிய விதம் தவறானது என வாசிம் அக்ரம் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்திக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டு முக்கிய போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால் 99 சதவீதம் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அப்ரார் அகமது கொண்டாட்டம்

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 241 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அபாரமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இளம் தொடக்க ஆட்டக்காரர் கில் மிகச் சிறப்பான முறையில் விளையாடினார். ரோஹித் சர்மா விக்கெட்டை ஷாகின் கைப்பற்றியதும் அவருடைய பந்துவீச்சில் மட்டும் ஐந்து பவுண்டரிகளை கில் அடித்து நொறுக்கினார்.

இந்த நிலையில் அரைசதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த கில்லுக்கு அப்ரார் அகமது சிறந்த பந்து ஒன்றை வீசினார். அப்படி ஒரு பந்தை எதிர்பார்க்காத கில் கிளீன் போல்ட் ஆனார். அப்பொழுது அப்ரார் அகமது கண்ணை அசைத்து தலையை ஆட்டி மைதானத்தை விட்டு வெளியேறு என கில்லுக்கு சைகை செய்தார். இது தற்பொழுது சர்ச்சையான ஒன்றாக மாறி வருகிறது.

- Advertisement -

இதை டிவியில் கூட பார்க்க முடியவில்லை

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது “அப்ரார் அகமது வீசிய பந்து என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் அவர் கொண்டாடிய விதத்தால் நான் ஈர்க்கப்படவில்லை. அப்படியான கொண்டாட்டத்திற்கு ஒரு நேரமும் இடமும் இருக்கிறது நண்பா. உங்கள் அணி சிக்கிக்கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் விக்கெட் எடுத்தால் பணிவாக இருக்க வேண்டும். இது அவருக்கு தெரியாது என்றால் யாராவது சொல்லிக் கொடுங்கள்”

இதையும் படிங்க : சிஎஸ்கே தட்டி தூக்கிய ஆஸி முன்னாள் கோச்.. அஸ்வின் குழுவுக்கு துணையாக நியமனம் – வெளியான புதிய தகவல்கள்

“உங்களுடைய கொண்டாட்டம் எல்லாவற்றையும் முடித்து வைத்து விட்டது. நீங்கள் ஒரு 7 ரன்னுக்கு ஐந்து விக்கெட் கைப்பற்றினால் இப்படி ஒரு கொண்டாட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த இடத்தில் இந்த கொண்டாட்டம் அவசியமற்றது. இதை டிவியில் பார்ப்பதற்கு கூட அழகாக இல்லை” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -