நேற்று துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் மிகச் சிறப்பான முறையில் விளையாட வருகிறார். தற்போது அவரது வெற்றிகரமான பேட்டிங் எப்படி அமைந்தது என்று மேத்யூ ஹைடன் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுல் முதல் இன்னிங்ஸில் மிகவும் நம்பிக்கையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினார். ஆனால் மூன்றாவது நடுவரின் சர்ச்சையான முடிவால் 26 ரன்னில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய கேஎல்.ராகுல் மிகச் சிறப்பான முறையில் விளையாடிய அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் 63 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். ஆஸ்திரேலிய கண்டிஷனில் அவருடைய பேட்டிங் டெக்னிக் மிக அற்புதமாக இருக்கிறது.
இந்த நிலையில் கேஎல்.ராகுல் பேட்டிங்கில் என்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்? முன்பு அவருக்கு என்ன பிரச்சனையாக இருந்தது? என்பது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் விளக்கமான முறையில் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து மேத்யூ ஹைடன் கூறும்பொழுது “நீங்கள் தொடக்க ஆட்டக்காரராக எப்பொழுதும் வெற்றியை விட அதிக தோல்விகளையே அடைகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் புதிய பந்தை எதிர்கொண்டு விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். அது மிகுந்த ஆபத்தை கொடுக்கக் கூடியது”
“கேஎல்.ராகுல் விஷயம் என்னை எப்பொழுதும் தாக்கியது. நான் இப்பொழுது அவர் குறித்து சொல்லப்போவது பாசிட்டிவான விஷயம் கிடையாது. அவர் இயல்பில் திறமையான வீரர் என்கின்ற காரணத்தினால், அவர் தலைக்குள் நிறைய விஷயங்கள் சென்றிருக்க வேண்டும். அதுதான் அவரை தடுமாற வைத்திருக்கிறது”
இதையும் படிங்க : ஸ்டார்க் எனக்கும் நடுவுல இதான் நடந்தது.. பும்ரா விராட் பாய் சொன்னததான் செஞ்சேன் – ஹர்ஷித் ராணா பேட்டி
“இப்படியான அதிகப்படியான திறமை தேவையான எளிமையான விஷயத்தில் இருந்து அவரை விலக்கி வைத்திருக்கிறது. ஆனால் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் எளிதான திட்டமான பந்தை விட்டு விளையாடுவதை செய்கிறார். பந்துகளை சரியான முறையில் விட்டு விளையாடுகின்ற காரணத்தினால் தான் அவர் வெற்றிகரமாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.